img
img

ஒரு வாரமாக காய்ச்சல் கண்ட குழந்தை மரணம்!
புதன் 22 மார்ச் 2017 15:33:06

img

தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஒரு வாரமாக மருத்துவமனை சிகிச்சைக்காகக் கொண்டு வந்தும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுந்த சிகிச்சையளிக்காமலும் நோயின் தாக்கத்தை உறுதிப்படுத்தாமலும் அலட்சியமாக நடந்து கொண்டது ஏன்? கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பெரிய மருத்துவமனையின் அலட்சியப் போக்கு ஒரு தொடர் கதைதானா என்று மரணமடைந்த ஐந்து வயது குழந்தை லாரணியாவை பறிகொடுத்த துக்கத் தினிடையே தாயார் பிரேம்ஸ்ரீ த/பெ புஷ்பநாதன் (வயது 30) கேள்வி எழுப்பினார். கடந்த 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தொடர்ந்து காய்ச்சல் கண்டு வந்த லாரணியாவை கிள்ளான் பொட்டானிக் அரசாங்க மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வந்தேன். டிங்கிக் காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் லாரணியாவுக்கு இரத்தப் பரிசோதனை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன் மறுநாளும் தொடர் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததுடன் காய்ச்சல் விட்டு விட்டு வருவதைக் கண்ட நான் எதற்கும் காத்திருக்காமல் அருகிலுள்ள சுங்கை பூலோ மருத்துவமனை, புஞ்சாக் அலாம் போலி கிளினிக், காப்பார் லக்கி கிளினிக் என இதர தனியார் மருந்தகங்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள அலைக்கழிக்கப்பட்டேன். இருப்பினும், தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு என்று உடல் நிலை மோசமாகித் துவண்ட லாரணியாவை மீண்டும் கடந்த 20-ஆம் தேதி கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றேன். லாரணியாவைத் தூக்கிச் சென்று அவரசப் பிரிவில் சேர்த் தேன். அப்போது அங்கிருந்த ஒரு சீன மருத்துவர், லாரணியாவின் இடுப்பில் உடுத்தியிருந்த பெம்பர்சை மாற்றும்படி என்னிடம் கூறினார். அவ் வேளையில் லாரணியாவுக்கு சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது. அப்போது லாரணியாவின் வயிறு ஏறி இறங்கிக் கொண்டிருப்பதையும் சுவாசம் விடு வதால் அப்படிச் செயல்படுவதையும் உணர்ந்தேன். அதன் பின் என்னை வெளியே சென்று காத்திருக்குமாறு அம்மருத்துவர் என்னிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 15 நிமிடம் கழித்து சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்த சகமருத்துவர் ஒருவர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்த தகவல் கேட்டு நான் திடுக்கிட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று சுங்கைபூலோ, டேசா கோல்ட் பீல்டு குடியிருப்பில் வசித்து வரும் பிரேம்ஸ்ரீ துயரத்துடன் தெரிவித்தார். மேற்பட்ட கிள்ளான் பெரிய மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போது என் மகள் கண் விழித்து வழக்கமான நிலையிலேயே இருந்ததை காரில் என்னுடன் வந்த என் தங்கையும் அதனைக் கண்ணுற்றதாக சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் தெரிவித்தும் அவர் எங்களின் கூற்றுக்கு மறுப்பு தெரி வித்ததுடன் மகள் லாரண்யா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தனது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் தொடர்பிலும் குழந்தை லாரணியாவின் திடீர் மரணம் தொடர்பிலும் தனது குடும்பத்தினர் பெரும் அதிருப்தி கொள்வதாகவும், இதன் தொடர்பில் போலீசாரும் தேசிய சுகாதார அமைச்சும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேம்ஸ்ரீயும் அவரின் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img