தங்களுக்கு இடையிலான விவாதத்திற்கான ஏற்பாட்டை இன்று நண்பகலுக்குள் செய்யு மாறு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் சுற்றுலா பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஸிஸுக்கு அவகாசம் அளித்துள்ளார். வரும் சனிக்கிழமை கோலகங்சாரில் மாரா அறிவியல் கல்லூரி யில் நடைபெறுவதாக இருந்த உத்தேச விவாதத்திற்கு போலீஸ் கடந்த திங்களன்று அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொது அமைதி, உத்தேச விவாதம் தொடர்பான மக்களின் ஆட்சேபங்கள், அதற்கு எதிரான போலீஸ் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத் தில் கொண்டு பேரா போலீஸ் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்த விவாதத்தை நஸ்ரி, தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான பாடாங் ரெங் காஸில் வைத்து இருக்கலாம். அங்குதான் இந்த விவாதத்தை நடத்துவதற்கு நஸ்ரி முதலில் பரிந்துரைத்தார். ஆனால், திடீரென்று நஸ்ரி, ஏன் மாரா அறி வியல் கல்லூரிக்கு இடம் மாற்றினார் என்று மகாதீர் வினவினார். என்னைப் பொறுத்தவரையில் அந்த விவாதம் நடத்தப்பட வேண்டும். எதனையும் மறைக்கக் கூடாது. பி.எம்.எப். ஊழல் உட்பட அவர்களால் எழுப்பப் படும் எந்தவொரு கேள்விக்கும் என்னால் பதில் சொல்ல முடியும்.எனவே, நஸ்ரிக்கு இன்று புதன் கிழமை மதியம் வரையில் காலக்கெடு வழங்குகிறேன். விவாதத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து கவனிக்குமாறு நஸ்ரியை கேட்டுக் கொள்கிறேன் என்றார் மகாதீர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்