உபர், கிரேப் கார்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அங்கீகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் மறியலில் குதித்தனர்.காலங்காலமாய் டாக்சிகளை ஓட்டி வரும் நாங்கள் இந்த உபர், கிரேப் கார்களின் வருகையில் மிகப் பெரிய பாதிப்பை எதிர்நோக்கி வருகிறோம். வருமானத்தில் மண் விழுந்து விட்டதால் பல டாக்சி ஓட்டுநர்கள் இத்துறையை விட்டே ஓடி விட்டனர். மீண்டும் டாக்சிகளை ஓட்டுவதற்கே அவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.இப்படி டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று மகஜரை மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் நடவடிக்கை குழு அரசாங்கத்திடம் வழங்கியது. குறிப்பாக உபர், கிரேப் கார்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அம்மகஜரில் குறிப்பிடப் பட்டி ருந்தது. ஆனால் இதுநாள் வரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எல்லோரும் அமைதியாக இருக் கின்றனர். கடந்த வருடம் ஸ்பாட், எஸ்கேஎம், பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி ஆகியோரை சந்தித்து எங்கள் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினார். உபர், கிரேப் கார்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஸ்பாட் தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எஸ்கேஎம்எம் கூறு கிறது.ஸ்பாட்டிற்கு சென்றாலும் எங்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. இது மேலிடத்து விவகாரம் என்று ஸ்பாட் கைவிரித்து விடுகிறது. டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி சந்தித்தால் எங்களுக்கு எந்தவொரு பதிலையும் அவர் கொடுக்கவில்லை. இதன் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தின் முன் திரண்டு நீதி கேட்கும் நோக்கில் நாங்கள் அனைவரும் இங்கு திரண்டுள்ளோம் என்று அக்குழுவின் தலைவர் ஜைலானி இசாவ்சுலுடின் செய்தியாளர்களிடம் கூறினார்.அரசாங்கத்திடம், அதைப் பிரதிநிக்கும் இலாகாக்களிடம் மகஜர்களை கொடுத்து நாங்கள் ஏமார்ந்து விட்டோம்.மீண்டும் ஏமாறக்கூடாது என்ற நோக்குடன் இம்முறை நாடாளுமன்றத்தில் அமர்த்திருந்து எதிர்க்கட்சி தலைவர்களிடம் நாங்கள் மகஜர்களை வழக்கியுள்ளோம். டாக்சி ஓட்டுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அத்தலைவர்களாவது நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் என்ற நம்பிக்கை மகஜர்களை நாங்கள் வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார்.இதனிடையே பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மட், ரபிஷி ரப்லி, தியான் சுவா, டத்தோ ஜொகாரி அப்துல் கனி, டத்தோ அப்துல்லா சனி அப்துல் ஹமிட் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டாக்சி ஓட்டுநர்கள் மகஜர்களை ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்