வங்காள தேச நாட்டவர் ஒருவருக்கு நோக்கமில்லா கொலை புரிந்ததாக குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட இலங்கை ஆடவருக்கு நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிம்பாங் பூலாய் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரூல் இஸ்லாம் ஷா (வயது 40) என்பவருக்கு நோக்கமில்லா கொலை புரிந்ததாக இலங்கை ஆடவரான தலுக்கு குகனேஸ் (வயது 22) மீது குற்றவியல் சட்டம் 304 (பி) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. நேற்று மாஜிஸ்திரேட் முக்தார்ஹாடி முத்தான் போக் முன்னிலையில் இவ்வழக்கு செவிமடுப்புக்கு வந்த வேளையில் இக்குற்றச்சாட்டை தாம் ஒப்புக் கொள்வதாகவும் பண மோசடி காரணமாக தாம் அவசரப்பட்டு விட்டேன் எனக்கு எந்த நோக்கமும் இல்லை என்று நீதிபதியிடம் கோரியதைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட் நபருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். பிராசிகியூஷன் சார்பில் சேர்லி சாய், எதிர்தரப்பில் மஹிந்தர் சிங் ஆஜரானார்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்