உடம்புப் பிடி மையங்களில் போலீசார் மேற்கொண்ட 5 அதிரடி சோதனைகளில் 22 பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சோதனைகள் கூச்சிங் வட்டாரத்திலும் பண்டாவானிலும் மேற்கொள்ளப்பட்டதாக சரவா மாநில குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ டேவ் குமார் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட உடம்புப் பிடி மையங்களில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.கைது செய்யப்பட்ட 26 பேரில் 4 ஆண்கள் அடங்குவர். உள்நாட்டு ஆடவர்களான இவர்கள் நால்வரும் சம்பந்தப்பட்ட உடம் புப் பிடி மையங்களை பராமரித்து வந்துள்ளனர். 10 சீன நாட்டு பெண்களும் 8 வியட்னாம் நாட்டுப் பெண்களும் 4 பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்களும் இச்சோதனையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து செக்ஸ் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப் பட்டவர்கள் மீது மேல் விசாரதனை மேற்கொள்ளப்படும் என டேவ் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்