27 நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள பாத்தா முக்குக் கடத்தப்பட்ட மாது எவ்வித காயங் களின்றி உயிருடன் மீட்கப்பட்டுக் குடும் பத்தினரிடம் ஒப்ப டைக்கப் பட்டுள்ளார். கடந்த மாத இடை யில் அதிகாலை 3.30 மணியளவில் அந்த மாது அவரின் வீட்டிலிருந்து கடத்தப் பட்டு பாத்தாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வும் அங்கு தோட்ட வீட்டில் அடைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது. மாது கடத்தப்பட்ட 2 வாரங்களுக்குக் கடத்தல்காரர்கள் அவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவில்லை. அதன் பிறகே, பெரிய தொகை யைப் பிணைப்பண மாகக் கோரியுள்ளனர். குற்றவியல் விசார ணைப் பிரிவு சிங்கப் பூர் மற்றும் இந் தோனேசியாவுடன் இணைந்து பணியாற் றியதன் வழி 18 வயதிலிருந்து 50 வயதிற்கு இடைப்பட்ட 18 சந் தேகப் பேர்வழிகள் ஜொகூரிலும் பாத்தாமிலும் கைது செய் யப்பட்ட தோடு மாதும் எவ்வித காயங்களின்றி மீட்கப்பட்டதாகத் தேசிய காவற்படையின் தலை வர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார். நேற்று இங்கு நடைபெற்ற குற்றவியல் இரகசிய பிரிவின் செயல்முறை மேம் பாட்டு மற்றும் விரிவாக் கம் குறித்த சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்