கோழிக் கொட்டகையிலுள்ள 4 கோழிகளை விழுங்கிய 20 கிலோ கிராம் எடையிலான மலைப்பாம்பை பொது தற்காப்பு படையினர் பிடித்தனர். பாஜாக் சோங் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கோழி கொட்டகைக்குள் அந்த மலைப்பாம்பு புகுந்துள்ளது. கொட்டகைக்கு பின்புறம் உள்ள புதரிலிருந்து மலைப்பாம்பு வந்திருக்கக் கூடும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இதன் தொடர்பில் கப்பளா பத்தாஸ் பொது தற்காப்பு படையினருக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வழங் கப்பட்டுள்ளது. அங்கு விரைந்த அதிகாரிகள் கோழி கொட்டகைக்குள் இருந்த மலைப்பாம்பை பிடிக்க சுமார் 10 நிமிடம் எடுத்துக் கொண்டனர். பிடிபட்ட மலைப்பாம்பை வன விலங்கு பாதுகாப்பு இலாகாவிடம் ஒப்படைக் கவுள்ளதாக தற்காப்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்