அரசு ஊழியர் என கூறிக் கொண்டு இந்த வட்டரத்தில் உள்ளவர்களை ஏமாற்றி பணத்தை பறித்து வந்த 47 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த வியாக்கிழமை மாலை 5 மணியளவில் செபராங் பிறையிலுள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனையை மேற்கொண்டபோது கெடாவைச் சேர்ந்த இந்நபர் கைது செய்யப் பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது இதுவரையில் 49 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சுமார் வெ.8 லட்சத்தை இவர் மோசடி செய்துள்ளதாகவும் பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் அன்வார் ஒமார் தெரி வித்தார்.கடந்த 7 வருடங்களாக இவர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். கார்களை மலிவு விலைக்கு விற்பதாகக் கூறியும் இவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மேல் விசாரணைக்காக 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அன்வார் ஒமார் தெரிவித்தார்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்