கடந்த ஒரு வாரம் காலமாக இங்குள்ள 26 சூதாட்ட மையங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 25 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 17 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் என சரவா மாநில குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ டேவ் குமார் தெரிவித்தார். இந்த அதிரடி சோதனை நடவடிக்கை கூச்சிங், சிபு, படாவான், மிரி, பிந்துலு, கோத்த சமஹரஹான், பாவ், சரதோக், மருடி ஆகிய 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையில் 34 கணினிகள், டேப்ளட், கைப்பேசிகள் வெ.6,633 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப் பட்டவர்கள் மீது மேல் விசாரணை தொடரப்பட்டு வருவதாகவும் இம்மாநிலத்தில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை துடைத்தொழிக்க காவல் துறை அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என டேவ் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்