img
img

மார்பகத்தில் 5 முறை கத்திக் குத்து!
செவ்வாய் 21 மார்ச் 2017 14:01:13

img

மார்பகப் பகுதியில் 5 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மியன்மார் மாதின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.ஜாலான் கெந்திங் கிள்ளானி லுள்ள அவர் வாடகை வீட்டில் அவரின் சடலம் கிடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட உணவகத்தின் மேல் மாடியில்தான் கொலை செய்யப்பட்ட 26 வயது பெண் தங்கியிருந்துள்ளார். அப்பெண்னின் சடலத்தை இரவு 8 மணியளவில் அவரின் காதலர் கண்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட கட்டிலின் கீழே இருந்து கூர்மையான ஆயுதத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணின் காதலன் உட்பட மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேல் விசாரனைக்காக அம்மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் படைத் தலைவர் முகமட் ரோய் சுஹைமி ஷாரிவ் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img