கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதில் நமது மாணவர்களில் பலர் இன் னும் குழப்பத்தில் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. தேர்வெழுதிய 434,535 மாணவர்களில் 8,647 பேர் அனைத்து பாடங்களிலும் ஏ புள்ளிகளைப் பெற்றனர்.சுமார் 340,698 மாண வர்கள் எஸ்.பி.எம். தேர்வுச் சான்றிதழ் பெற தகுதியடைந் துள்ளனர். தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள இம்மாணவர்களுக்கு இது மிகவும் நெருக்குதல் மிகுந்த ஒரு காலக்கட்டமாகவே அமைந்திருக்கும். உண்மை நிலவரத்தை ஏவுகணை ஆராய்கிறது. மலேசிய இந்திய சமூகம் கடந்த 60 ஆண்டுகளாக சமூகப் பொருளாதார இன்னல்களிலிருந்து விடுபடாமல் இருப்ப தற்கு அடிப்படைக் காரணமே உயர் கல்வியில் முழுமையாக விடுபட்டிருக்கும் சூழல் என்பதனை ஆய்வுசெய்ய வேண்டியதில்லை. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஏழ் மையைப் போக்குவதற்கு கல் வியே அடித்தளம் என் பதனை உணராமல் விருப்பம்போல் உயர்கல்வி வாய்ப்புகளை தேர்வு செய்ததால் 'கல்வி கடனாளி சமூகமாக' உருமாறி வருகின்றோம் என்பதையாவது உணர வேண்டும் என ஏவுகணை வலியுறுத்துகின்றது. ஏழ்மையான குடும்பத் தில் உள்ள ஒரு பிள்ளைக் காவது சரியான உயர் கல் வியை வழங்கிவிட்டால் ஒட்டுமொத்த குடும்பத் தையும் ஏழ்மை வட்டத்திலி ருந்து வெளியே கொண்டு வர முடியும் என்பதற்கு ஆயிரக் கணக்கான சான்றுகளை ஏவு கணையால் கூற முடியும். இந் திய இளைஞர்களின் மத்தியில் கரையான்களாய் அரித்து வரும் குண்டரிய நடவடிக்கைகளுக்கு காரணமே இந்தியப் பெற் றோர்கள் தங்களது பிள்ளை களின் உயர் கல்வி வாய்ப் புகளைத் தவறவிட்டது தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. எஸ்.பி.எம். தேர்வு முடிவல்ல தொடக்கம்! 2016ஆம் ஆண்டில் எஸ்.பி.எம். தேர்வினை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றிருக்கும் சூழலில் இந்திய சமூகம் பிள்ளைகளின் உயர் கல்வியை நிர்ணயம் செய்யும் படலத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஏவுகணை சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பு கின்றது. இந்திய சமூகம் பிள்ளைகளின் உயர்கல்வியை நிர்ணயம் செய்வதில் அவசரம் காட்டாமல் நிதானமாகவும், விவேகமாகவும் முடிவு எடுப்பதன் வழி ஏழ்மைச் சமூகம் எனும் வட்டத்திலிருந்து வெளியேறு வதற்கான வாய்ப்புகள் பிரகாச மாக இருப்பதை ஒவ்வொரு இந்தியப் பெற்றோரும் உணர வேண்டும். மாணவர்கள் எழுதியிருக்கும் எஸ்.பி.எம். தேர்வு கல்வியில் இறுதியல்ல. மாறாக, வாழ்க்கை யின் தொடக்கம் என்பதை அறிந்து சரியான நடவடிக்கை களைப் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும். உயர் கல் வியை நிர்ணயம் செய்வதற்கு அடிப்படை தேவைகள்: * 2016ஆம் ஆண்டு பிள்ளை களின் தேர்வு முடிவுகள் * பெற்றோர்களின் பொருளா தார நிலை. * பிள்ளைகளின் இலக்கு (இலட்சியம் / கனவு) * சரியான கல்வி நிலையங்கள் என்பதை வைத்தே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மலேசிய இந்திய சமூகத்தில் உயர் கல் வியை நிர்ணயம் செய்வது 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட' சூழலில்தான் பெரும்பாலும் அமைந்துள்ளது. * மூன்றே கிரெடிட்டுகளின் துணையோடு டிப்ளோமாக் கல்வியை தனியார் கல்லூரிகளில் தொடங்குவது. * சாதகமான தேர்ச்சி இல் லாமல் ஆயத்தக் கல்வியை தரம் வாய்ந்த தனியார் பல்கலைக் கழகங்களில் தொடங்குதல். * செலவுத் தொகையும் தரு கின்றார்கள் என்பதற்காக வேலை வாய்ப்புகள் அறவே இல்லாத துறைகளைத் தேர்வு செய்தல். * பொது பல்கலைக் கழக வாய்ப்பு என வரும் தொலைபேசி அழைப்புக்களை நம்பி தனியார் பல்கலைக் கழக வாய்ப்புகளில் பல ஆயிரங்களை இழத்தல். * கடை வீதிகளின் மேல் மாடிகளில் இருக்கும் கல்லூரி களில் நண்பர்களின் ஆலோ சனையின் பேரில் பதிந்து கொள்ளுதல். * 'உபகாரச் சம்பளம்' எனும் மாயையான வார்த்தையால் தடுமாறி கல்வி கடன்களால் அவதிப்படுதல். * ஆயத்தக் கல்வி இலவசம் (Foundation) என்பதன் அடிப் படையில் இளங்கலைப் படிப் பினை கூடிய தொகையுடன் படிக்கும் சூழலுக்கு தள்ளப்படு தல் போன்ற சம்பவங்களுக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருப்பதை ஏவுகணை சுட்டிக் காட்ட விரும்புகின்றது. இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள் :எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு மிகவும் நெருக்குதல் மிக்க காலக்கட்டமாகவே இது அமைந் திருக்கும். * தனியார் கல்வி மையங்களின் அழைப்புக் கடிதங்கள் * இடைவிடாத தனியார் கல்லூரி முகவர்களின் தொலை பேசி அழைப்புகள். * நண்பர்களின் உண்மையறி யாத அழைப்புகள் * ஒலிபரப்பு நிலையங்களின் ‘நம்பும்படியான’ விளம்பரங்கள் * உறவினர்களின் ஆலோ சனைகள் / நச்சரிப்புகள் * உயர்கல்வி கருத்தரங்கு களின் மறைமுக தாக்கங்கள் போன்ற சூழல்களைத் தாண்டி வருவது என்பது சிரமமான ஒன்றாகவே ஏவுகணை கருதுகின்றது. ‘அவசரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பார்களே, உயர் கல்வியைத் தேர்வு செய்வதில் அவசரத்தினைக் காட்டினால் மிகப்பெரிய இழப்பினை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். மலேசிய இந்திய சமூகத் தில் மருத்துவத்துறை தொடர் பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எப்போதுமே இருந்து வருவதாக வீட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளை யையும் மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு பெற்றோரிடமும் இருப்பதை ஏவுகணை வரவேற்றாலும் பிள்ளைகளை மருத்துவராக்க வேண்டும் என்பதற்காக வெளி நாடுகளில் முடிப்பதற்கான முயற்சிகளை தனியார் ஆலோசனை நிறுவனங்களின் (ஏஜெண்டுகள்) வாக்குறு தியை நம்பி ஏமாந்தவர்களின் கதையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஏவுகணை வலியுறுத்து கின்றது. எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்தைய உயர்கல்வி வாய்ப்பு களை முறையாகத் தேர்வு செய்யவில்லை என்றால் எதிர்நோக்கவிருக்கும் இன்னல் கள் தொடர் பில் நாளை ஆராய்வோம்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்