ஆண் உறுப்பில் மோதிரம் சிக்கி கொண்டதால் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் 12 மணி நேரம் வலியால் துடித்துள்ளார்.உடலுறவு செய்யும் பொழுது கூடுதல் பலத்தை பெறுவதற்காக அவர் இச்செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.இருந்த போதிலும் ஆண் உறுப்பு வீக்கம் அடைந்ததால் மோதிரத்தை அகற்ற முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட ஆடவர் இரவு 8 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரவு 10.50 மணியளவில் பினாங்கு பொது மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்ததாக ஜாலான் பேராக் வட்டார தீயணைப்புப் படையின் அதிகாரி முகமட் அஸ்ரோல் நாயிம் அபிடின் தெரிவித்தார். ஆண் உறுப்பில் அணியப்பட்டிருந்த மோதிரத்தை வெட்டி எடுக்க சுமார் 10 நிமிடங்கள் பிடித்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மோதிரத்தை அகற்ற பல முறைகளை கையாண்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. சோப்பு, எண்ணெய், லோஷன் போன்றவற்றை பயன்படுத்திய போதிலும் அவரால் அந்த மோதி ரத்தை அகற்ற முடியாத பட்சத்தில் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.மருத்துவ அதிகாரிகளுக்கும் அதனை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால் தீயணைப்புப் படையின் உதவியை நாடியுள்ளதாக முகமட் அஸ்ரோல் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்