இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமான சர்ச்சைக் குரிய செய்திப்பட திரையீட்டிற்கு பல்வேறு அரசு சாரா அமைப்புகள் கூட்டாக நேற்று முன்தின இரவு ஏற்பாடு செய்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த செய்திப்படத்தை திரையிட்டதற்கு லீனா ஹென்றி என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அப்போதைய திரையீடு நடவடிக்கைக்கும் இப்போதைய இந்த அரசு சாரா அமைப்புகளின் திரையீடு நடவடிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால் இணையதள வழியிலான திரையீடுதான். இணையத்தளத்தின் வாயிலான திரையீடு என்பது நாட்டின் தணிக்கை சட்டத்தை மீறுவதாக அமை யாது என்று அரசு சாரா அமைப்புகள் ஒன்றின் பேச்சாளர் தெரிவித்தார். 90 நிமிட செய்திப் படத்தை சுவாராம், அலிரான், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மலேசியா போன்ற அமைப்புகள் கூட்டாக திரையீடு செய்தன. இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை கொன்றது சம்பந்தமான செய்திப்படத்தை திரையீடு செய்ததற்காக லீனா ஹென்றி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார். பட திரையீடு நடந்துகொண்டிருந்த இடத்தின்மீது உள்துறை அமைச்சு திடீர் சோதனை நடத்தியது. லீனா ஹென்றி கைது செய்யப்பட்டார். மார்ச் 22இல் இவர் தண்டனையை எதிர்நோக்கலாம். கூடுதல் பட்சம் மூன்று ஆண்டுகால சிறைத்த ண்டனை அல்லது 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். கடுமையான தணிக்கை முறைக்கு அரசாங்கம் ஒரு முடி வுக்கு கொண்டு வர வேண்டும். வளர்ச்சியடைந்த நாடுகளின் முறையினை இது பின்பற்ற வேண்டும் என லீனா ஹென்றி தெரிவித்தார். தனது நிலைப் பாட்டிற்கு ஆதரவு தெரிவித்த கல்வி மான்கள், திரைப்படத் துறையினருக்கு ஹென்றி நன்றி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்