நாட்டில் சிறுநீரக பிரச்சி னைகளை எதிர்நோக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 400,000ஐ அடைந்திருப்பதாக சுகாதார துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஹில்மி யாஹ்யா தெரிவித்தார்.இதில் 40,000 பேருக்கு சிறுநீரக பாதிப்பு 5ஆவது கட்டத்தில் இருக்கிறது. இவர்க ளுக்கு எல்லாம் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப் படுகிறது. மற்றவர்களின் பாதிப்பு முதல் கட்டத்திலிருந்து நான்காவது கட்டம் வரை உள்ளது.ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கு 200 பேர் சிறுநீரக பாதிப்பு உள்ளது. உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் மேற் கண்ட எண்ணிக்கை வருடந்தோறும் ஏறுமுகம் காணலாம் என்று துணை யமைச்சர் குறிப்பிட்டார்.இங்குள்ள தாமான் பொட்டாணியில் உலக சிறுநீரக தினத்தை தொடக்கி வைத்த பிறகு துணை யமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். சிறுநீரக நோயும் உடல் பரு மனும் என்பது இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள்.உடல் பருமனை தவிர்க்க ஆரோக்கியமான வாழ் வியல் முறையினை போற் றுவது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். சைக்கிள் சவாரி, நடைப் பயிற்சி மற்றும் ஆரோக் கியமான உணவுகளை உட்கொள்வது மூலம் உடல் பருமனை தவிர்க்கலாம்.ஒவ்வொரு வருடம் ஆறாயிரத்திற்கும் மேற் பட்டோர் புதியதாக சிறுநீரக நோய்க்கு ஆளாகி வருகிறார்கள்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்