கிம் ஜோங் நாம் கொலை விசாரணைக்கு உதவுவது தொடர்பில் முக்கிய பிரமுகர் ஒருவரை போலீசார் தேடி வருவதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.இந்த முக்கிய பிரமுகர் உட்பட பல்வேறு நபர்களை போலீசார் தற்போது வேட்டை யாடி வருகின்றனர். தேடப் பட்டு வரும் பட்டியலில் உள் ளவர்களின் அடையாளங் களை வெளியிட டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் மறுத்து விட்டார். தேடப்பட்டு வரும் நபர்கள் அநேகமாக வடகொரியா நாட்டவர்களாக இருக்கலாம். ஆனால் யார் அந்த முக்கிய பிரமுகர் என்ற பெயரைச் சொல்ல போலீஸ் படைத் தலைவர் மறுத்து விட்டார். நான் பல விவரங்களை வெளியிட இயலாது. ஆனால் மேலும் பல நபர்களை தேடி வருகிறோம். சம்பந்தப் பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் வடகொரிய தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. 210ஆவது போலீஸ் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்குள்ள தாமிங் சாரியில் பணி ஓய்வு பெற்ற போலீஸ் காரர்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியினை தேசிய போலீஸ் படைத் தலைவர் தொடக்கி வைத்தார்.மூன்று சந்தேகப் பேர்வழி களில் ஒருவர் வடகொரியா தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் யோன் வான் சோங். இவரின் ஒத்துழைப்பு கோரி வெளிவிவகார அமைச் சின் மூலம் கடிதம் அனுப்பப் பட்டது. ஜேம்ஸ் என்ற பெயரை கொண்ட மூன்றாவது சந் தேகப் பேர்வழி குறித்து அவ் வளவாக விவரம் தெரிய வில்லை. தேடப்பட்டு வரும் பல்வேறு நபர்கள் பற்றி அதிக விவரம் தெரிவிக்க இயலாது. காரணம் இது பல்வேறு யூகங்களுக்கு இடமளிக்கிறது என்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் சுட்டிக் காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்