கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த கடுமையான மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இந்திய வணிகர்களின் வர்த்தகப் பகுதியான லெபோ அம்பாங்கில் வெள்ளம் ஏற்பட்டு கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஜாலான் துன் பேராவில் உள்ள மெக்டோனல்ட் கிடங்கில் ஏழு அடிகள் வரை வெள்ளம் உயர்ந்தது. நேற்றிரவு 7 மணி வரை தீயணைப்பு மீட்புப் படை யினர் கால்வாய்களை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஜாலான் மிலாயு சந்தை, மஸ்ஜித் ஜாமெக் எல்.ஆர்.டி., விஸ்மா யாக்கின், செயிண்ட் மேரி தேவாலயம், தாமான் ஈபு கோத்தா ஆகிய இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. அதே சமயம், புக்கிட் அந்தாரா பங்சா குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. எனினும், உயிருடற் சேதங்கள் ஏற்படவி ல்லை. கிள்ளான ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் பல இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு இலாகா அதிகாரி சம்சோல் மாரிப் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்