காப்பார் தாமான் செந்தோசாவில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மூண்ட கோரத் தீயில் ஆறு குடும்பங்கள் வீடுகளை இழந்தன. இந்த துயரச் சம்பவத்தில் அக்குடியிருப்பின் ஜாலான் ஹம்சா ஆலாங் மூன்றில் ஆறு ஒரு மாடி வீடுகள் தீயில் முற்றாக அழிந்தன.தகவல் கிடைக்கப் பெற்று நிகழ் விடத்திற்கு விரைந்த வட கிள்ளான் தீயணைப்பு நிலையத்தார் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை அனைத்தனர். கொளுந்து விட்டெறிந்த தீயை கண்டு அக்குடும்பங்கள் உடைமைகளை காப்பாற்ற முடியாமல் பிள்ளைகளுடன் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியதாக அறிய வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் நிகழ்விடத்தில் தீயணைப்பு வீரர்கள் தட்டுத் தடுமாறியதாகவும் போதுமான தண்ணீருக்காக மற்றொரு வண்டிக்கு அவர்கள் காத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தனர். போதுமான தண்ணீர் இல்லாததால் தீயை கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் பல மணி நேரம் போராடினர் என்றும் தீயணைப்பு நிலையத்தாரின் அலட்சியம் ஆறு வீடுகளை தீக்கிரையாக்கி விட்டது என அம்மக்கள் குற்றம் சாட்டினர். பணத்தையும் நகைகளையும் தீயில் பறிகொடுத்த சம்பந்தப்பட்ட இந்திய குடும்பங்கள் வீட்டின் முன் இருந்த வாகனங்களை மட்டுமே மீட்க முடிந்தது. இச்சம்பவத்தின் போது வீட்டில் பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் இருந்ததாக மாதர்கள் விவரித்தனர். சம்பந்தப்பட்ட வீடொன்றின் மேல் மாடி அறையிலிருந்து தீ பரவியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த சம்பவத்தின் போது பக்கத்து அறையில் படித்துக் கொண்டிருந்த தன்னுடைய மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக செல்வக்குமார் பாலசுப்பிரமணினம் (வயது 50), தெரிவித்தார். இருந்தும் தன்னுடைய இபிஎப் சேமிப்பிலிருந்து அண்மையில் எடுக்கப்பட்ட தொகையும், நகைகளும், உடைமைகளும் தீயில் கருகியதாக மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான அவர் வேதனைப்பட்டார். இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டாவது மகனின் திருமண வரவு பணத்தையும், நகைகளையும் தீயில் பறிகொடுத்து விட்டதாக அரிகிருஷ்ணன் குழந்தை (வயது 67) சொல்லொன்னா துயரத்தில் மூழ்கினார். தன்னுடைய ஒரே மகள் திருமண ஏற்பாடுகள் தீயோடு தீயாகி விட்டதாக மகேஸ்வரி தங் கையா (வயது 54) குமுறினார். செப்டம்பரில் நடைபெறவிருந்த தன்னுடைய மகளின் திருமணத்திற்கு சேமிக்கப்பட்ட பணமும், நகைகளும் தீக்கிரை யான துயரம் அவரை வாட்டியது. இதனிடையே வீடுகளையும், உடைமைகளையும் தீயில் பறிகொடுத்த நான்கு இந்திய குடும்பங்கள் உள்ளிட்ட ஆறு குடும்பங்களுக்கு இங்குள்ள டேவான் ஸ்ரீ கிராயோங்கில் தற்காலிக நிவாரணம் அளிக்கப்பட்டது. அக்குடும்பங்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய செமந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி, கிள்ளான் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு வீட்டு வாடகையும், முன் பணமும் பெற்றுத் தரப்படும் என அவர் உறுதியளித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்