இந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் விவகாரம் பல்வேறு சர்ச்சைக்குள்ளாகி வரும் வேளையில், 355 சட்டத் திருத்த மசோதாவை அர சாங்கமே இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறி னார். இந்நாட்டிலுள்ள இதர சமயத்தினருக்கு மிரட்டல் கொடுக்கா வண்ணம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன்ரசாக் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். இந்நாட்டில் முஸ்லிம் சமயத்தை வளர்க்கும் அதேவேளையில், இந்நாட்டில் வாழும் இதர சமயத்தினரின் நலனுக்குப் பாதிப்பு வராமல், தேசிய முன்ன ணியும், முன்பு நமக்கு ஜென்ம விரோதிகளாக இருந்த புதிய நண்பரும் சேர்ந்து இந்த சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்ய முன்வந்துள்ளதாக அவர் சொன்னார். இந்நாட்டிலுள்ள மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கு, நாம் சிறு கும்பல் கொண்ட நண்பர்களை இழந்தாலும் பரவாயில்லை. ஆனால், நம்முடன் தொடர்ந்து போராடுவதற்கு நமக்கு பெரிய அளவில் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்றார். இப்போது நமக்கு கிடைத்துள்ள புதிய நண்பர்கள் முன்பு நமக்கு பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால், அவர்கள் மற்ற சமயத்தினரை புறந்தள்ளாமல், நம்முடன் இணைந்து அப்பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர் என்றார். நேற்று திரெங்கானு அரங்கத்தில் கிளை அளவிலான அம்னோ கூட் டங்களைத் தொடக்கி வைக்கும் அதேவேளையில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்