நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்களின் வாக்குகள் கணிசமாக தேசிய முன்னணிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேளையில் விரைவில் வரக்கூடும் என எதிர் பார்க்கப்படும் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியே நண்பன் குழுவிற்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகள் இந்திய சமுதாயத்தின் மொழி சார்ந்த உரிமை என்பதோடு மட்டுமல்லாமல் உணர்வுகளையும் பாதிக்கச் செய்யும் சூழலை ஏற்படுத்த வல்லது என்பதன் அடிப்படையில் மலேசியக் கல்வியமைச்சின் துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதனின் செயல்பாடுகள் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை நண்பன் குழுவால் நிரூபிக்கமுடியும். * கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி * சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி * ரீஜண்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் கட்டுமானம் 100% பூர்த்தியடைந்து (ரீஜண்ட் தமிழ்ப்பள்ளியைத் தவிர) ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் மாணவர்கள் பயன்படுத்தாத அவலமான சூழலுக்கு யார் காரணம்? கல்வி அமைச்சு மில்லியன் கணக்கில் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனத்திற்கு (PMC) வழங்கிய பின்னரும் மேம்பாட்டுப் பணிகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதே ஏன்? * செயிண்ட் ஹீலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி * பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளும் கட்டிமுடிப்பதற்குள் நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலும் முடிந்து விடுமா? என்ற அச்சமே நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கோலப்பிலா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விடியல் வருமா? வராதா? என்பதுதான் தற்போதைய கேள்வியாகும். தமிழ்ப் பள்ளிகளின் காவலன் என மார்தட்டிக் கொள்ளும் ம.இ.கா.வினால் திட்டமிட்டபடி தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானத்தினை முடிக்க வில்லை என்பதற்கான விவரங்களையாவது தருவார்களா? என எதிர்பார்ப்பது அறிவுப்பூர்வமான செயலாகவே நண்பன் குழு கருதவில்லை. இதற்கிடையே நெகிரி செம்பிலான் ம.இ.கா.வின் தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எல்.மாணிக்கத்தின் செயல்பாடுகள் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சாத கமாக இல்லை என்பதை செயிண்ட் லியோனார்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரம்தொடர்பில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதை மாநில இந்தி யர்கள் இன்னமும் மறக்கவில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கு விடியல் வேண்டுமானால் ம.இ.கா.வின் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டுமா? என்ற கேள்வியையே மாநில இந்தியர்கள் கேட்டு வருவதை நண்பன் குழு நன்கு உணர்ந்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்