img
img

குறைந்த விலையில் பயணச் சீட்டு! சுற்றுலாவில் சிறப்புச் சலுகை வேண்டுமா?
சனி 18 மார்ச் 2017 13:49:31

img

மாட்டா சுற்றுலா கண்காட்சிக்கு வருகை தரும் மக்களுக்கு ஓஸ்கார் சுற்றுலா நிறுவனத்தினர் உரிய சேவைகளை வழங்கி வருகின்றனர். நாட்டில் சுற்று லாத்துறையை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டா கண்காட்சி நடத்தப்படுகிறது.அவ்வகையில் 2017ஆம் ஆண்டுக்கான கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று வரை தலைநகர் புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெற்றுவருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் உட்பட விமான நிறுவனங்களும் இக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.வெளிநாடு, உள்நாட்டு சுற்று லாக்கள், பயண டிக்கெட்டுகள் உட்பட அனைத்து சேவைகளும் இக்கண்காட்சிக்கு வருகை தரும் மக்களுக்காக தயார்ப்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகை யில் நாட்டில் புகழ் பெற்ற ஓஸ்கார் ஹோலி டேய்ஸ் நிறுவனத் தினரும் இக் கண்காட்சியில் முகாமிட்டுள்ளனர். கண்காட்சி நடை பெறும் ஹால் 3இல் தான் ஓஸ்கார் ஹோலி டேய்ஸ்சின் முகப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனத் தின் தலைமை இயக்குநர் ஜோன்சன் பிரான்சிஸ் கூறினார். மாட்டா கண்காட்சிக்கு வருகை தரும் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க ஓஸ்கார் நிறுவனத்தின் பணி யாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.குறிப்பாக உள்நாடு, வெளிநாடுகளுக்கு சுற்றுலாவுக்கு செல்லும் மக்களுக்கு உரிய சேவைகள் இங்கு வழங் கப்படும். பயண டிக்கெட், விமான டிக்கெட்டுகள், உணவுகள், போக்குவரத்து என அனைத்து ஏற்பாடுகளையும் நாங்களே செய்து தருகிறோம்.அதே வேளையில் மாட்டா கண்காட்சியை தொடர்ந்து பல சுற்றுலாக்கள் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன.ஆகவே பொதுமக்கள் திரளாக வந்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை ஓஸ்கார் முகப்பிடம் திறந்திருக்கும்.அதே வேளையில் தலைநகர் ஜேக்கல் மால் அருகில் உள்ள முன்சி அப்துல்லாவில் உள்ள ஓஸ்கார் அலுவலகத்திலும் இந்த கழிவு விழாவில் பயண சேவை களை வாடிக்கையாளர்கள் பெற லாம் என்று ஜோன்சன் பிரான்சிஸ் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img