img
img

சோசிலாவதி கொலை விவகாரத்தில் மூவருக்கு தூக்கு!
சனி 18 மார்ச் 2017 13:35:39

img

தன் தாயார் டத்தோ சோசிலாவதி மற்றும் இதர மூன்று நபர்களை கொலை செய்த குற்றத்திற்காக வழக்கறிஞர் பத்மநாபன் உட்பட மூவருக்கு தூக்குத்தண்டனை நிலை நிறுத்தப்பட்டிருப்பது மூலம் 7 ஆண்டு காலமாக காத்திருந்த தாங்கள் தற்போது நிம்மதி பெருமூச்சுவிட முடிவதாக சோசிலாவதியின் மகள் எர்னி டெக்ரிவாதி தெரிவித்தார். சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது. அதனை முழுமை யாக மதிக்கிறோம். ஏழு ஆண்டு களாக எங்கள் மனதிற்குள் இருந்த சுமை நேற்று முன்தினம் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் அகன்றுள்ளது. நீதி எங்கள் குடும்பத்திற்கு மட்டும் கிடைக் கவில்லை. கொலையுண்ட மற்ற மூன்று குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ளது என்று கோடீஸ்வரி சோசிலாவதியின் ஒப்பனை நிறுவனத்தை தொடர்ந்து நடத்தி வரும் அவரின் மகள் டெக்ரிவாதி தெரிவித்தார். கோலாலம்பூரில் ஒப்பனை நிறுவனம் ஒன்றின் முதலாளியான கோடீஸ்வரி சோசிலாவதி (வயது 47) , அவரின் கார் டிரைவர் கமாருடீன் சம்சூடின் (வயது 44), வங்கி அதிகாரி நுர்ஹிஷாம் முகமட் (வயது 38), வழக்கறிஞர் அகமட் காமில் கரிம் (வயது 32) ஆகியோரை மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல் எரிக்கப்பட்ட குற்றத்திற்காக வழக்கறிஞர் என். பத்மநாபன் உட்பட மூவருக்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை நேற்று முன்தினம் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது. நான்காவது நபரான மதன் என்பவர் விடுவிக் கப்பட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கும் 9.40 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பந்திங் தஞ்சோங் சிப்பாட், ஜாலான் தஞ்சோங் லாயாங், காடோங்கில் பண்ணை வீட்டில் வழக்கறிஞர் பத்மநாபன் நல்லையன், தில்லையழகன், ஆர். காத்தவராயன் ஆகியோர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img