வரும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறும் வகையில் வழி நடத்தக்கூடிய இடைக்காலத் தலைவர் யார் என்பதை சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என முன்னாளில் சட்டத்துறை அமைச்சராக சேவையாற்றிய டத்தோ ஜாயிட் இப்ராஹிம் நேற்று கூறியுள்ளார். அவரின் அம்முடிவு அடுத்து பிரதமராவது யார் எனத் தீர்மானிக்க இயலாத சூழ்நிலையிலுள்ள நடப்பு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு உதவுவதாக இருக்கும் என ஜாயிட் வலைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேசிய முன்னணிக்கு (தேமு) எதிராக உண்மையிலேயே ஒன்றுபட்டு போராடுவதற்கு எதிர்க் கட்சித் தலைவர்களிடையே உறுதிப்பாடு இல்லை எனும் மனக் குறையை பெர்சே ஆர்வலர் மன்டீப் சிங் அண்மையில் வெளிப்படுத்தி கண்டனத்துக் குள் ளானார். அது தொடர்பில் மன்டீப் சிங்கை தற்காத்து ஜாயிட் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது பல மலேசியர்களின் கருத்துகளைத் தான் மன்டீப் வெளிப்படுத்தியுள்ளார்.தேமு எதிர்கொண்டுள்ள பிரச்சினை களினால் அடுத்த பொதுத் தேர்த லில் எதிர்க்கட்சி வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது எனக் கருதலாம். எனினும் எதிர்க்கட்சியிலுள்ள பல பிரச்சினைகளினூடே எதிர்க் கட்சித் தலை வர் யார் என்பதைத் தீர்மானிக்க இயலாத நிலை உள்ளது. அதனால் எதிர்க்கட்சியினர் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு அநேகமாக இன்னும் முப்பதாண் டுகள் ஆகலாம் என்றும் மன்டீப் கூறியிருந்தார். -மலேசியா கினி
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்