கள்ள விசிடிகள் விற்பனைக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பண்டார் மெந்தகாப் வட்டாரத்திலுள்ள கடை வரிசையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையின் போது கடையின் மூன்றாவது மாடியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ள விசிடிகள் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 16 வயது முதல் 27 வயதுக்குட்பட்ட மூவரை போலீசார் கைது செய்தததாக பகாங் மாநில குற்றப் புலனாய்வு பிரிவின் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் வாஷிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.இந்த நடவடிக்கையில் கள்ள விசிடிகள் அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், தொலைக்காட்சி உட்பட இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெ.12,500 மதிப்பிலான 133 விசிடி உறைகளும் கண்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே கைது செய்யப்பட்ட மூவரும் திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சூப்ரிண்டெண்டன் முகமட் வாஷிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்