வழிப்பறிக் கொள்ளை அல்லது திருட்டுச் சம்பவங்களுக்காக பிடிபடுபவர்களை தாங்களே தண்டிக்க சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் சம் பவம் மலேசியாவில் அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் அச்சம்பவங்கள் பற்றிய காணொளிகள் அதிகமாகவே பதிவேற்றம் செய்யப்பட்டு, பகிர்வு செய்யப் படுகிறது. அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நமது கவனத்திற்கு வந்துள்ளது. ஏதோ திருடி விட்ட குற்றத் திற்காக ஓர் இந்திய மாது மானபங்கம் படுத்தப்படுகிறார். தன் ஆடைகளை அகற்றும்படி அவர் கூடியிருக்கும் ஒரு சிலரால் கட்டாயப்படுத்தப்படுகிறார். அவரும் அழுதபடியும், மன்றாடியபடியும் தன்மேல் சட்டையையும், பாவாடையையும் அகற்றுகிறார். இதுதான் நமது கலாச் சாரமா என்று வன்மையாகக் கண்டித்துள்ளார் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கஸ்தூரி பட்டு. மனநோயாளிகள் போல சில மலேசியர்கள் நடந்து கொண் டதாக சுட்டிக்காட்டிய அவர், சூழ்நிலை எவ்வாறாக இருந் தாலும் ஒருவரை இப்படி நடத்துவது சட்டபடி குற்றமாகும் என்று கருத்துரைத்தார்.மூன்று நிமிடம் 36 வினாடிகள் வரை அக்காணொளி நீடிக்கிறது. அதில் அப்பெண் மிகவும் கடுமையாக நடத்தப்படுகிறார். சிலர் அவரை பிடித்துக்கொண்டு அவர் எங்கும் சென்று விடாமல் தடுக்கின்றனர். அப்பெண்ணின் அருகே அவரின் மகன் நின்றுகொண்டு தன் தாய்க்காக மன்றாடுகிறான் கெஞ்சுகிறான். யாரும் மசிய வில்லை. இம்மாதிரியான போக்கு கண்டிக்கத்தக்கது என்றார் கஸ்தூரி பட்டு. இதனிடையே, இந்த காணொளி நிச்சயமாக போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றிருக்கும். குற்ற வாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருக்காது. போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈப்போ பாராட் தொகுதி ஜ.செ.க. உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்