கிளானா ஜெயா எல்.ஆர்.டி. பயணச் சேவையின் போது 21 வயது இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு வலை வீசியிருந்த பிராசாரனா நிறுவனத்தின் துணைப்போலீஸ் படையினர் அந்த ஆசாமியை கைது செய்துள்ளனர். நூர் டினி வான் ஹேரென் என்ற அந்தப் பெண், கடந்த மார்ச் 13-ஆம் தேதி கிளானா ஜெயா எல்.ஆர்.டி நிலையத்தில் ரயிலில் ஏறியபோது உள்ளே ஆடவன் ஒருவன், அவரை நோக்கி ஆபாசமான முக பாவனையைக் காட்டியிருக்கிறான். பிறகு, அவருக்கு மிக அருகில் நெருங்கி வந்து கொச்சை வார்த்தைகள் பேசியிருக்கிறான். தொடர்ந்து அவரிடம் அசிங்கமாக முகபாவனைகளைக் காட்டிக் கொண்டிருந்தான். தம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தனக்கு ஏற்பட்ட இந்நிலை குறித்து தம்முடைய முகநூலில் அவர் விவரித்திருந்தார். இதனை அறிந்த பிராசாரனா மலேசியா பெர்ஹாட் நிறுவனம், உடனடியாக நூர் டினியுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் இதனை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்ட துணைப் போலீசார் நேற்று முன் தினம் தாமான் ஜெயா எல்.ஆர்.டி நிலையத்தில் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்