பேரா, புக்கிட் அமான் போலீசார் நடத்திய கூட்டு சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 120 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல், போதைப் பொருள் விநியோகம் உள்ளிட்ட இதர சட்ட விரோத நடவடிக் கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் சந்தேக பேர்வழிகளுக்கு எதிராக தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய 120 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அசான் வான் அமாட் தெரிவித்தார். நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது சாபு, ஹெரோயின் 5, கஞ்சா உள்ளிட்ட இதர வகையிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே சமயம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவர் செக்ஷன் 39பி அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது. இதற்கிடையே வெ.2 ஆயிரம் மதிப்பிலான 14,924 கள்ள சிகரெட்டுகளுடன் 488 பாட்டல் மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வான் அசான் வான் அமாட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்