சீனி விலை ஏற்றத்தை காரணமாக வைத்து உணவு, பானங்களின் விலையை அதிக அளவிற்கு உயர்த்தும் வணி கர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சீனி விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி அவ்வாறு செய்ய வேண்டாம் என அவர் களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனி விலை ஏற்றம், சம்பந் தப்பட்ட வணிகர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் கூறினார்.2011-ஆம் ஆண்டு விலை கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாப தடுப்பு சட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் மற்றும் பானங்களின் விலையை அதிகரிக்கும் வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும் என அவர் எச்சரித்தார். இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத சீனியின் விலை உயர்வினால் இம்மாதம் முதலாம் தேதி சுத்திகரிக் கப்பட்ட வெள்ளை சர்க்கரை விலை 11 காசு ஏற்றம் கண்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்