காமப் படங்களைப் பார்க்க மொபைல் கருவியைப் பயன்படுத்துவதில் உலகில் மலேசியப் பெண்கள் ஏழாவது இடத்தை வகிப்பதாக போர்ன்ஹப் என்ற போர்னே கிராப்பி அகப்பக்க தகவல் கூறிற்று.மலேசியப் பெண்களில் 84 விழுக்காட்டினர் போர்ன்ஹப் பில் உலவ ஒரு மொபைல் கருவியைப் பயன்படுத்துவ தாக அந்தத் தகவல் தெரிவித்தது. உலகளவில் பார்த்தால், தென் ஆப்பிரிக்க பெண்கள் தான் அந்த மொபைல் கருவியை அதிகளவில் பயன் படுத்துகிறார்கள். அவர்கள் 91 விழுக்காட்டினராவர். அமெரிக்கா இரண்டாவது நிலையில் உள்ளது. அங்கு 89 விழுக்காட்டுப் பெண்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். மூன்றாவது நிலையில் பிரிட்டன் உள்ளது. அங்கு 86 விழுக்காட்டு பெண்கள் இந்த மொபைல் கருவியைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைப் பார்க் கிறார்கள். எனினும் 66 விழுக்காட்டு மலேசிய ஆண்கள் மட்டுமே இந்த பாணியில் ஆபாசப் படம் பார்க்கிறார்கள்.கூகுல் பகுப்பாய்வு மூலம் கிடைத்த மக்கட்தொகை விவரங்களை அடிப்படையாக வைத்து பெண்களின் எண்ணிக் கையை போர்ன்ஹப் வெளியிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்