காணாமல் போன பாதிரியார் ரேமண்ட் கோ கோங் ஜீயின் மகனை மிரட்டி பணம் கேட்டதாக பகுதி நேர உபர் வாகன ஓட்டுநர் மீது பெட்டா லிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். பாதிரியார் ரேமண்ட் கோவை விடுவிக்க அவரின் 33 வயது மகன் ஜோனாதன் கோ ஸு ஹாவை மிரட்டி 30,000 வெள்ளி கேட்டதாக லாம் சாங் நாம் (வயது 31) மீது குற்றஞ்சாட்டப்பட்டது. லாம் இந்தக் குற்றத்தை மார்ச் 6ஆம் தேதி இரவு 8.46 மணியள வில் பாராடிங் மாலில் புரிந்ததாக கூறப்பட்டது. லாமினை ஜாமினில் விடுவிக் கும்படி அவரின் வழக்கறிஞர் டத்தின் ராஜ் பிரீட் கோர் கேட்டுக் கொண்டார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதி நடத்த மாஜிஸ்திரேட் முகமட் அஸாலி இப்ராஹிம் உத்தரவிட்டார். கோ பிப்ரவரி 13ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா ஜாலான் எஸ்எஸ் 4பி/10 இல் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்