ம.இ.கா.வின் பாரம்பரிய தொகுதிகளில் ஒன்றான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை வரும் 14-ஆவது பொதுத்தேர்தலில் மீட்டெடுக்கும் முயற்சிகளில் கட்சி தற்போது மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு மறுபடியும் போட்டியிடும் சாத்தியம் நிலவுவதாக கோடிகாட்டப் பட்டுள்ளது. வெற்றி பெறும் வேட்பாளருக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மிகவும் கண்டிப்பாக இருக்கும் பட்சத்தில், இதில் ம.இ.கா. சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொள்ள தயாராக இல்லை. குறிப்பாக, கட்சியில் நிலவும் சர்ச்சைகளின் காரணமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துள்ள சூழலில் இருக்கும் தொகுதிகளை இழந்து தேசிய முன்னணி கூட்டணியில் அவச்சொல்லை சம்பாதித்துக் கொள்ளவும் கட்சி தயாராக இல்லை என்பதை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. சுங்கை சிப்புட் தொகுதியைப் பொறுத்த வரை ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு சுமார் 34 ஆண்டுகள் அங்கு ‘ஆட்சி புரிந்துள்ளார்.’ சுங்கை சிப்புட் மக்களுக்கு அவர் கொண்டு வந்த மேம்பாடுகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆகவே, இந்த முறை மீண்டும் அவ ரையே வேட்பாளராக நிறுத்தி, மீண்டும் அத்தொகுதியை கைப்பற்றும் சாத்தியங்கள் ஆராயப்பட்டு வருவதாக கட்சிக்கு அணுக்கமான வட்டாரங்கள் குறிப் பிட்டன. தொகுதிக்கான போராட்டங்களில், சுங்கை சிப்புட் தொகுதிக்கு நான், நீ என்ற போராட் டம் ஏதும் கட்சியில் கிடையாது. காரணம், அங்கு ம.இ.கா. சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி என்பது கேள்விக்கிடமானதே. எனினும், சுங்கை சிப்புட் என்றால் சாமிவேலு, சாமிவேலு என்றால் சுங்கை சிப்புட் என்று அங்கு நீண்ட காலமாகவே ஒரு சூழ்நிலை நிலவி வந்துள்ளது. ஆனால், சாமிவேலுவிற்கு 82 வயதாகி விட்ட நிலையில் அவர் சரியான வேட்பாளரா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு வேளை அவரை அங்கு வேட் பாளராக நிறுத்துவதில் சர்ச்சை நிலவினால் அவரின் மகன் டத்தோஸ்ரீ வேள்பாரியை வேட்பாளராக நிறுத்தும் அடுத்தக் கட்ட திட்டமும் தயாராக உள்ளது என்று அறியப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலிலேயே வேள்பாரியை அங்கு நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டன. அத்தொகுதியில் பல்வேறு அரசு சாரா இயக்கங்களுடனும் அடிமட்ட தலைவர்களுடனும் அவர் சந்திப்புகளையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தார். அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டறியும்படி அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கூறியதை தொடர்ந்து அவர் அங்கு தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கினார். கடந்த 2008-ஆம் ஆண்டில் மொத்தம் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் பி.எஸ்.எம். கட்சியின் மைக்கல் ஜெயகுமாரிடம் சாமிவேலு தோல்வியைத் தழு வினார். இது அதிர்ச்சித் தரும் ஒரு தோல்வியாக அமைந்தது. ஓர் அரசியல் ஜாம்பவானின் வீழ்ச்சியாக மக்கள் இதனை பார்த்தனர். இத்தேர்தலில் ஜெய குமாருக்கு 16,458 வாக்குகளும், சாமிவேலுக்கு 14,637 வாக்குகளும் கிடைத்தன. பதிவு பெற்றிருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 47,424. ஆனால், வாக் களித்தவர்களோ 33,154 பேர். இதே ஆண்டில் சீனர்களும், இந்தியர்களும் ஒட்டு மொத்தமாக தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பியதே இந்த மாற்று அலைக்கு காரண மாகக் கூறப்பட்டது. சுங்கை சிப்புட் மட்டுமின்றி நாடு தழுவிய நிலையில் ம.இ.கா., ம.சீ.ச., கெராக்கான் உள்ளிட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட் சிகளின் வேட்பாளர்களே மிக மோசமான தோல்வியைத் தழுவினர். சுங்கை சிப்புட் தொகுதியில் 41 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களாகவும், 31 விழுக் காட்டினர் மலாய்க்காரர்கள், 21 விழுக்காடு இந்திய வாக்காளர்களாகவும் உள்ளனர். கடந்த 2008-இல் இத்தொகுதியை தேசிய முன்னணி இழந்ததற்கு சீன சுனாமி அலைதான் காரணமென்று சொல்லப்பட்டது. இத்தொகுதியில் சாமிவேலுக்கு உள்ள செல்வாக்கை வைத்து, மீண்டும் சுங்கை சிப்புட் தொகுதியை கைப்பற்றும் நோக்கத்தில் 2013-ஆம் ஆண்டு தேர் தலில் அங்கு சாமிவேலுவை வேட்பாளராக நிறுத்துவதற்கு பேரம் பேசப்பட்டதாக அறியப்படுகிறது. சாமிவேலு போட்ட ஒரே நிபந்தனை - நான்தான் வேட்பாளர் என்று பிரதமர் சொல்லட்டும். நான் ஏற்றுக்கொள்கிறேன். பழனிவேல் (அப்போது கட்சியின் தேசியத் தலைவர்) சொல்லக்கூடாது என்பது தான். ஆனால், இதெல்லாம் நடக்காத பட்சத்தில், ம.இ.கா. தேசியத் தலைவருக்குத்தான் சுங்கை சிப்புட் என்ற பாரம்பரிய முறையை மாற்றி, இங்கு டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியை வேட்பாளராக நிறுத்தி விட்டு, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் பழனிவேல். தேவமணி சுங்கை சிப்புட்டில் தோற்றுப் போனார். இதற்கடுத்து, 14-ஆவது பொதுத் தேர்தல் வரும் ஹரிராயா பெருநாளுக்குப் பிறகு நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன. இம்முறை தேர்தல் தேசிய முன்னணிக்கு முன்பை விட கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சுங்கை சிப்புட் தொகுதியை மீட்க மீண்டும் சாமி வேலுவிடம் பேரம் பேசப்படலாம் என்று நம்பப்படுகிறது. நஜீப்பின் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் களமிறங்கியிருப்பது இதற்கு ஒரு காரணமாகும். கோதாவில் இறங்க சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார் நஜீப் துன் ரசாக். அவர் சரியான தேர்வா என்றொரு கேள்வி ஒரு புறமிருக்க, பேரா கம்பார் நாடாளுமன்றத் தொகுதியை ஜ.செ.க.விடமிருந்து மீட்டெடுக்க கம்பார் வாசியும், அங்குள்ள ம.சீ.ச.வினருக்கு நன்கு அறிமுகமானவருமான டான்ஸ்ரீ ஹியூவ் சீ தோங்கை 1995 முதல் 2008-ஆம் ஆண்டு வரையில் மூன்று தவணைக்கு ம.சீ.ச பயன்படுத்தியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தனது 77-ஆவது வரை அவர் உழைத்தார். அது போல தேசிய முன்னணி சாமிவேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் இதற்கான ரகசிய வியூகம் தொடங்கியுள்ளது என்றும் வட்டாரங்கள் கூறு கின்றன.சாமிவேலுவின் இரும்புப் பிடியில் இருந்த சுங்கை சிப்புட் கோட்டை மீண்டும் ம.இ.கா. வசம் வருமா? வேள்பாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் இது சாத்தியமாகுமா இது மக்கள் கேட்கும் கேள்வி.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்