அரசாங்க பள்ளிகளில் கட்டணமில்லாமல் படிவம் 6இல் கல்வியின் வழி எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அனைத் துலகப் பல்கலைக் கழகங்களில் உபகாரச் சம்பளத்தோடு மேற்கல்வியைத் தொடர்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியையான ரஞ்சனி சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். பேரா, பத்துகாஜா நகருக்கு அருகில் உள்ள கிண்டா வேலி தோட்டத்தில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் தொழிலாளி யான தனது தந்தை சுப்ர மணியம் சின்னையாவிற்கும் தாயார் காளியம்மாள் செட்டிக்கும் ஒரு பிள்ளை செய்ய வேண்டிய கல்வி கடமையைச் செய்வதற்கு ஆணி வேராகப் படி வம் 6க்கான கல்வி அமைந்திருந்ததாகக் கூறிய ரஞ்சனி சுப்ரமணியம், படிவம் 6இல் உயர் கல்வியைத் தொடங்குவதற்கான முயற்சி தனது வாழ்வையே மாற்றியுள்ள தாகப் பெருமையோடு கூறுகின்றார். பேரா, பத்துகாஜா கிண்டா வேலி தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் படிவம் 1 முதல் படிவம் 5 வரையிலான கல்வியை பத்துகாஜா, தோ இந்ரா வங்சா அமாட் இடைநிலைப் பள்ளியிலும் உயர் கல்வியான படிவம் 6க்கான கல்வியை பத்து காஜா, சுல்தான் யூசோப் பள்ளியில் முடித்தார். எஸ்டிபிஎம் தேர்வில் கிடைத்த மிகச் சிறந்த தேர்ச்சியின் பலனாக மலேசிய தேசியப் பல்கலைக் கழகத்தில் (Universiti Kebangsaan Malaysia - UKM) ஆசிரியர் துறையில் இளங்கலை பட்டப் படிப்பினை முடித்துள்ளார் ரஞ்சனி சுப்ரமணியம். கஷ்டம் என்பது மனதளவில் ஏற்படும் பய உணர்ச்சியே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியை ரஞ்சனி தற்போது மாற்றுத் திறனாளிக்காக பினாங்கு தஞ்சோங் பூங்கா இடைநிலைப் பள்ளியில் பணியாற்றி வருகின்றார். எஸ்பிஎம் தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சகோதர சகோதரிகள் மேற்கல் வியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாகப் பெற்றோர்களின் பொருளாதார சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். நண்பர்களோ அல்லது தோழி களோ சொல்கிறார்கள் என்பதற்காக உயர் கல்வியை முடிவு செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார் ரஞ்சனி சுப்ரமணியம். தியாக உணர்வோடும், நம்பிக்கையோடும் சீராட்டிவளர்க்கும் பெற்றோர்களின் மனங்குளிர வைப்பதே ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும் என்பதை வலியுறுத்திய ரஞ்சனி சுப்ரமணியம் தான் தன்னுடைய பெற்றோருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளதை அனைவரும் கருத்தில் கொண்டு படிவம் 6இல் கல்வி பயில்வதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்