கொலை குற்றத்திற்காக தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருந்த இரு இந்திய சகோதரர்களுக்கு நேற்று அதிகாலையில் தண்டனை நிறைவேற்றப் பட்டது. தூக்குத்தண்டனையை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்னெஸ்டி இண்டர்நேசனல் மலேசியா என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ரமேஷ் பத்துமலை (வயது 45) மற்றும் அவரின் தம்பி சுந்தர் பத்துமலை ( வயது 40) ஆகியோர் நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மீதான முடிவுக்காக இன்னும் காத்திருக்கையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டதை அந்த அனைத்துலக அமைப்பு கண்டித்தது. இது கொடுமையானது. கைதிகள் நாளை வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவார்கள். அதற்குத் தயாராகிக்கொள்ளும்படி அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர், இப்போது அந்தத் தகவல் தவறானது என்று அறியப்பட்டுள்ளது. மாறாக புதன்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர் எம்னெஸ்டி இண்டர்நேஷனல் மலேசியாவின் ஷாமினி தர்ஷினி காளிமுத்து கூறினார். அந்த இரு இந்திய சகோதரர்களுக்கு எதிரான தூக்குத்தண்டனை நிறைவேற்றம் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்தது. எனினும் அவ ரின் குடும்பத்தினர் நெகிரி சமஸ்தானாதிபதியிடம் பொது மன்னிப்பு கோரி மேல்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து தண்டனை நிறைவேற்றம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. எனினும் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றம் நாளை வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படுவதாக அவர்களின் குடும்பத்தினருக்கு கடந்த திங்கட் கிழமை சிறைச்சாலை இலாகா கடிதம் அனுப்பியிருந்தது. இது குறித்து குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்தனர். அவ்விரு சகோதரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத் தண்டனை தொடர்பில் நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதியிடம் மேல்முறையீடு செய்யப் பட்டுள்ள நிலையில் முடிவு இன்னும் தெரியாத நிலையில் தண்டனையை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்று ஷாமினி தர்ஷினி காளிமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளையில் அவ்விரு சகோதரர்களுக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றும்படியும் தூக்குத்தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தும்படி நேற்று முன்தினம் காலையில் அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவித்தனர். கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கும் பின்னிரவு 12.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெகிரி செம்பிலான், மம்பாவ், போர்ட்டிக்சனை நோக்கிச் செல்லும் ஜாலான் லாபு, 19 ஆவது கிலோமீட்டரில் கிருஷ்ணன் த/பெ ராமன் (வயது 35) என்பவரை காருக்குள்ளேயே வெட் டிக்கொன்றதாக அவ்விரு சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் பண்டார் ஸ்பிரிங் ஹில்லைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் குற்றவாளிகள் என்று உயர்நீதிமன்றம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிவித்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக தீர்ப்பு அளித்தது. கூட்டரசு நீதிமன்றமும் அவர்களின் தண்டனையை உறுதி செய்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்