இந்திய டாக்சி ஓட்டுநர்கள் மீது சுமத்தப்படும் அவதூறு குற்றச்சாட்டுகளை நாங்கள் சாதாரணமாக விடமாட்டோம் என்று மக்கள் கொமுனிகேஷன் வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் முத்து நேற்று கூறினார்.உபர், கிரேப் கார்கள் போன்றவற்றால் டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.தற்போது நாட்டில் எரிவாயுவின் தட்டுப்பாட்டால் டாக்சிகளுக்கு எரிவாயு நிரப்புவதிலேயே எங்களுக்கு நேரமும் காலமும் பாழாகி விடுகிறது. இப்படி பல போராட்டங்களுக்கு மத்தியில் டாக்சி ஓட்டுநர்கள் தங்களின் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இப்பிரச்சினைகளின் காரணமாக பலர் இத் துறையை விட்டே ஓடி விட்டனர்.இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் டாக்சி ஓட்டுநர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது அவர் களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்து வருகிறது.குறிப்பாக தனது காரில் பயணித்த இந்தியப் பெண் ஒருவரிடம் நகைகளை கொள்ளையடித் ததாக டாக்சி ஓட்டுநர் சுகுமாறனை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சுகுமாறனிடமிருந்து டிராவல்ஸ் போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்த பின் நேற்று மாலை 5.15 மணிக்கு அவரை விடுவித்தனர்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவையாகும். ஆனால் குற்றம் செய்தார் எனக் கூறப்படும் தகவல் வாட்ஸ்அப்பில் நாடு முழுவதும் பரவியுள்ளது. இச்சம்பவத்தால் சுகுமாறனால் எப்படி மீண்டும் டாக்சியை ஓட்ட முடியும். வாடிக்கையாளர்கள் எப்படி துணிந்து அவரின் டாக்சியில் ஏறுவார்கள் என்று முத்து கேள்வி எழுப்பினார்.அன்றாட பிழைப்பை நம்பி தான் அனைத்து டாக்சி ஓட்டுநர்களும் போராடி வருகின்றனர். இப்படி அவர்களின் பிழைப்பில் மண் போடும் வகையிலான அவதூறு குற்றச்சாட்டுகளை சங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது. அதன் அடிப்படையில் சுகுமாறன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் மீது விரைவில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று முத்து செய்தியாளர்களிடம் கூறினார்.இதனிடையே சுகுமாறன் சம்பந்தப்படுத்திய கொள்ளை சம்பவம் வாட்ஸ்அப்பில் பரவி வருவது எங்களுக்கு தெரியவந்தது. உடனே இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்யுமாறு சுகுமாறனை நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இருந்த போதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் சுகுமாறனை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததால் சுகுமாறன் விடுவிக்கப்பட்டார் என்று டாக்சி ஓட்டுநர்களில் ஒருவரான ஜோன் கூறினார்.டாக்சி ஓட்டுநர் சுகுமாறனும் ஆதரவு தெரி விப்பதுடன் அவர் குறித்து போலீசாரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் 20க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் நேற்று போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்