கிள்ளான் பிரபல ஹோக்கியேன் மண்டபத்திற்கு அருகிலுள்ள செண்ட்ரோ மால் கட்டடத்தில் மேற்கொள் ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கையின்போது கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் சுமார் 62 கட்டுமான தொழிலாளர்கள் உயிர் தப்பிய வேளையில் அப்பகுதி மிகவும் பரபரப் பாகக் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட சீரமைப்பு நடவடிக்கை யின் போது, திடீரென்று கூரை சரிந் ததால் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களில் 20 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.நேற்று காலை 10.45 மணியளவில் மேற்பட்ட கூரைப் பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தைக் கேள்விப் பட்டதும் 3 தீயணைப்பு நிலையங் களிலிருந்து 20 வீரர்கள் அப்பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப் பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு பாதுகாப்புப்படைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சுமார் 6,096 சதுரஅடி பரப்பளவிலுள்ள கூரைப் பகுதி சரிந்து விழுந்தது. இதன் தொடர்பில் சரிந்த கூரைகள் அகற்றப் பட்டு உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இருப்பினும், இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்