நகர்ப்புறங்களில் வாழும் இந்திய மாணவர்களுக்கு பல்வேறு வகையான கல்வி வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் உட்புறப் பகுதிகளிலும், கிராமப் புறங்க ளிலும் வாழ்ந்து வரும் இந்திய மாணவர்களின் பட்டதாரியாகும் கனவிற்கு உரமிடுவது படிவம் 6 மட்டுமே என்பதனை வலியுறுத்திக் கூறியுள்ளார் தனி யார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் ரூபாதேவி இராஜமோகன். பேரா மாநிலத்தின் சிலிம் ரிவர் நகரில் தற்போது வசித்து வரும் தந்தை இராஜமோகன் பெருமாள் தாயார் சரஸ்வதி தம்பதியரின் மூத்த பிள்ளையான ரூபாதேவி ராஜமோகன் தனது ஆரம்பக் கல்வியை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் தொடங்கிய நிலையில் தனது இடைநிலைப் பள்ளிக்கான கல்வியை சிலிம் ரிவர், டத்தோ சூல்கிப்ளி முகம்மது இடைநிலைப் பள்ளியிலும், படிவம் 6க்கான கல்வியை அதே பள்ளியிலும் தொடர்ந்து எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதால் மலேசிய பெர்லிஸ் பல்கலைக் கழகத்தில் (Universiti Malaysia Perlis- Unimap) அனைத்துலக வர்த்தகத் துறையில் (Bachelor in International Business) இளங்கலை பட்டப்படிப்பையும் அறவே கடனில்லாமல் கற்ற தாகப் பெருமையோடு கூறுகின் றார் ரூபாதேவி இராஜமோகன். சுங்கை பில் தோட்டத்தில் சாதாரண ரப்பர் மரம் வெட்டும் தொழிலை மேற்கொண்டிருந்த தந்தை இராஜமோகன் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து தங்களது லட்சியக் கனவுகளுக்கு தூணாக நின்றதை நினைவு கூர்ந்திருக்கும் ரூபாதேவி இராஜமோகன் தமிழ்ப் பள்ளியில் கிடைத்த அனுபவமே ஒரு பட்டதாரியாக வேண்டும் என்ற கனவினை விதைத்ததாகக் கூறுகின்றார். புறநகர்ப் பகுதிகளில் வாழும் இந்திய மாணவர்கள் விளம்பரங்களின் மாயையினால் தனியார் கல்லூரிகளில் தஞ்சமடைவதை மறு ஆய்வு செய்துவிட்டு படிவம் 6-இல் உயர் கல்வியைக் கற்கும் வாய்ப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாணவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆறாம் படிவம் (form 6) தனக்குத் தரமான கல்வியை வழங்கியதால்தான் அரசாங்கப் பல்கலைக் கழகத்தில் பயிலும் வாய்ப்பு கிட்டியதாகவும் தெளிவாக கூறுகின்றார் ரூபாதேவி இராஜமோகன். ஒவ்வொரு பிள்ளையும் தங்களுக்காகத் தியாகம் செய்திருக்கும் பெற்றோர்களைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனும் லட்சியத்திற்கு படிவம் 6இல் நிச்சயமாகக் கைகொடுக்கும் என்பதை தான் நிரூபித்திருப்பதாகப் பெருமையோடு கூறுகின்றார். கஷ்டப் பட்டு படிப்பதை விடுத்து இஷ்டப்பட்டு படித்தால் படிவம் 6க்கான கல்வி எளிமையாக அமைந்துவிடும் என்ற அறிவுரையையும் முன் வைத்துள்ளார் ரூபாதேவி இராஜமோகன்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்