நேற்று மாலை 6.00 மணியளவில் கூலாயில் குறிப்பாக பண்டார் இண்டா புறாவில் மழையுடன் வீசிய வரலாறு காணாத புயல் காற்றால் இந்நகரில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.சில மரக்கிளைகள் வாகனங்களின் மீது விழுந்து சேதப் படுத்தின. இரவுச் சந்தைக்காக போடப் பட்ட கூரைகள் பறந்தன. கூலாய் மருத்துவமனை முன்புற நெடுஞ்சாலையோரமாக இருந்த மரக்கிளைகளும் சாலையில் விழுந்து போக்குவரத்துக்களை நிலைக்குத்தச் செய்து விட்டன.ஜொகூர் மாநிலத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான கூலாயில் வரலாறு காணாத புயல் ஏற்பட்டு இருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரதான சாலைகளில் மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல வீடுகளில் கூரைகள் பலத்த சேதமுற்றுள்ளன. கார்கள் மீது மரங்கள் விழுந்ததால் சேதத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த அடுத்த அரைமணி நேரத்தில் பொது தற்காப்புப் பிரிவினர் விரைந்துள்ளனர். இரவு 9 மணி வரையில் கிடைக்கப் பெற்ற தகவலின்படி மக்களுக்கு உடல் சேதம் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து கண்டறிய முடியவில்லை. ஆம்புலன்ஸ் வண்டிகளும் விரைந்துள்ளன. கூலாய் நகரமே நேற்று நிலைக்குத்தியுள்ளது. பல இடங்களில் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற் றும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியினை மேற்கொண்டனர். இரவு 8.30 மணி வரையில் போக்குவரத்து நெரிசலில் கூலாய் நகரம் ஸ்தம்பித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்