மாற்று குடியிருப்பு நிலத்திற்காக கடந்த 23 ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருந்த 32 லுமூட், புண்டூட் தோட்டத் தொழிலாளர்களின் விவகாரத்திற்கு இறுதியாக விடியல் பிறந்தது. அந்தப் பாட்டாளி மக்களுக்கு மொத் தம் 86 லட்சத்து 80 ஆயிரத்து 50 வெள்ளி கிடைத்துள்ளது. பாட்டாளி மக்கள் சார்பில் வழக்கை நடத்திய வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலமாக 32 தொழி லாளர்களுக்கும் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு அந்த இந்திய கூட்டுறவுக்கழக நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது என்று வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த சந்திப்பின்போது இவ்விவகாரத்திற்கு சமரசமாக தீர்வு காணலாம் என்று அந்த கூட்டுறவு நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே இணக்கம் காணப்பட்டது. கடந்த மார்ச் 12ஆம் தேதி சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் அந்த இழப்பீட்டு தொகையினை வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்திடம் வழங்கியது. நேற்று பந்தாயில் உள்ள அலுவலகத்தில் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் இதற்கான காசோலையினை எடுத்து வழங்கினார். இதனால் தொழிலாளர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சி. ஒவ்வொரு தொழிலாளிக்கும் இரண்டு லட்சம் வெள்ளிக்கு மேல் இழப்பீடு தொகை கிட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.1994ஆம் ஆண்டு வாக்கில் அந்த கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து வேலை இழந்த 32 தொழிலாளர்களுக்கு அந்த தோட்டத்திலேயே ஒவ்வொருவருக்கும் தலா 1/4 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதற்கு நிறுவனம் இணக்கம் தெரிவித்து இருந்தது. ஒன்பது ஏக்கர் நிலத்தை 32 பேருக்கு பகிர்ந்தளிப்பதற்கு முடிவு காணப்பட்டது. இதற்காக அந்த தொழிலாளர்ககுக்கு வழங்கப்பட்ட பணி ஓய்வுத் தொகையில் ஒவ்வொருவருக்கும் 5,414 வெள்ளி கழித்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டுறவு நிறுவனம் ஒதுக்கிய நிலமோ மின்சார கம்பி களுக்கு கீழே அமைந்திருந்துள்ள பகுதியாகும். இதனை ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர். அந்த நிலமே தொழிலாளர்களுக்கு உரியது என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் பிடிவாதமாக இருந்ததால் பாட்டாளிகள் வழக்கு தொடுக்க முடிவு செய்தனர். தங்கள் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் வாதாடினர். இறுதியில் சமரச அடிப்படையில் தொழிலாளர்களின் தேவைகளுக்கு சுமுகமாக தீர்வு காணப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மனோகரன் மலையாளம் மனநிறைவு தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்