img
img

3 லோரிகள் மோதிய கோர விபத்தில் எரிவாயு தோம்புகள் சரிந்தன!
செவ்வாய் 14 மார்ச் 2017 11:22:42

img

மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் எரிவாயு தோம்புகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரெய்லர் லோரி, கொண்டெய்னர் லோரி மீது மோதியதில் அதன் டிரைவர் முனியாண்டி (வயது 50) சீட்டுக்கட்டுகளைப் போல் சரிந்து விழுந்த எரிவாயு தோம்புகள் மத்தியில் சிக்கி, உடல் சிதறி மாண்டார்.இந்த சம்பவம் நேற்று காலையில் இங்கு தென் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் (எஸ்.கே.வி.இ.) 36 ஆவது கிலோமீட்டரில் பூலாவ் இண்டாவை நோக்கிச் செல்லும் தெலுக் பங்லீமா காராங்கில் நிகழ்ந்தது. எண்.84, ஜாலான் தெராத்தாய், செனாவாங், சிரம்பானைச் சேர்ந்த முனியாண்டி த/பெ ராமசாமி (வயது 50) என்பவரே இந்த சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் ஓட்டிச் சென்ற கொண் டெய்னர் லோரியை எரிவாயு தோம்புகளை ஏற்றிவந்த டிரெய்லர் லோரியின் வால் பகுதி மோதிய அதிர்வில், லோரியிலிருந்து சரிந்து நாலா புறமும் படுவேகத்தில் பறந்த எரிவாயு தோம்புகளுக்கு மத்தியில் முனியாண்டி உடல் சிக்கி சிதறியது. இந்த கோர விபத்தில் மற்றொரு லோரி டிரைவரான கிள்ளான் தாமான் செந்தோசாவைச் சேர்ந்த தேவேந்திரன் த/பெ கிருஷ்ணன் (வயது 54) மற்றும் ஜொகூரைச் சேர்ந்த முகமட் பைசால் பின் சாப் (வயது 38) படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிள்ளான் துங்கு அம்புவான் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பந்திங்கிலிருந்து பூலாவ் இண்டாவை நோக்கி சென்று கொண்டிருந்த கொண்டெய்னர் லோரி ஓட்டுனர் முனி யாண்டி, லோரியின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அவரின் லோரி அடுத்த கரையில் பாய்ந்து, எதிர்ப்புற சாலைக்கு ஓடியது. அப்போது எதிரே இரசாயன கலவையை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த லோரியுடன் முனியாண்டியின் லோரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அச்சமயத்தில் தொடர்ந்து பின்னால் எரிவாயு தோம்புகளை ஏற்றி வந்து கொண்டிருந்த டிரெய்லர் லோரி ஓட்டு னர், விபத்துக்குள்ளான கொண்டெய்னர் லோரியை மோதுவதிலிருந்து தவிர்க்க முயற்சித்துள்ளார். அந்த சம யத்தில் அவரின் லோரியின் வால் லோரியின் மீது மின்னல் வேகத்தில் மோதிய போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது என்று கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஷிஷான் தெரிவித்தார். முனியாண்டியின் உடலை மீட்பதற்கு போலீசார் தீயணைப்பு படையினரின் உதவியை நாடினர். ஷா ஆலம், போர்ட் கிள்ளான் பந்திங் ஆகிய பகுதிகளிலிருந்து மூன்று தீயணைப்பு மீட்புப் பிரிவினர் அழைக்கப் பட்டனர். எளிதில் வெடிக்கக்கூடிய தன்மைகொண்ட இரசாயன கலவையை ஏற்றிவந்த கொள்கலனில் சிறிய ஓட்டை விழுந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. தெய்வாதீனமாக எந்தவொரு வெடிப்பு சம்பவம் நிகழவில்லை என்று அவர் விளக்கமளித்தார். முனியாண்டியின் உடல் மீட்கப்பட்டு பின்னர் கிள்ளான் பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தினால் எஸ்.கே.வி.இ. நெடுஞ்சாலையில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவ்விபத்து தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இச்சம் பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பந்திங் போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img