மம்பாங் டியாமானிலுள்ள வீட்டில் புகுந்து திருடிய கேங் விக்கி கும்பலைச் சேர்ந்த மூவரை போலீஸ் தேடி வருகிறது.கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி காலை 8.45 மணியளவில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மம் பாங் டியாமானிலுள்ள குத்தகையாளரின் வீட்டில் புகுந்து கொள்ளையிட்டுள்ளனர். கொள்ளையர்கள் வீட்டிலிருந்த நகைகள், ரொக்கம், நிலப்பட்டா, மடிக்கணினி, மோட்டார் சைக்கிள்கள் என வெ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இக்கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் எங் கோங் சூன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இக்கும்பலின் தலைவர் விக்கி (வயது 26) கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஜொகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இந்த கும்பலைச் சேர்ந்த மூவரை போலீஸ் தேடி வருகிறது. நால்வரை கைது செய்ததில், அவர்களிடமிருந்து இரு மோட்டார் சைக்கிள்களையும் பாதுகாப்பு இரும்புப் பெட்டி யையும் போலீசார் மீட்டதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்