தங்களது நாட்டிற்கு விரைவுப்படகில் கள்ளத்தனமாக செல்வதற்கு இங்குள்ள காட்டுப் பகுதியில் இரண்டு நாட்க ளாக பதுங்கியிருந்த 48 இந்தோனே சிய கள்ளக் குடியேறிகளை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக சூப்ரிண் டெண்டன் சாரி பின் அரிப்பின் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுங்கை ரெங்கிட், பந்தாய் புங்காய் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட தாக துணைக் கமாண் டருமான அவர் கூறினார். கைதானவர் களில் 43 ஆண்கள், 4 பெண் கள் மற்றும் குழந்தை ஒன்றும் அடங்கும் என்று கூறிய அவர், அனை வரும் மேற்கொண்டு விசார ணைக்காக பெனாவார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைதான அனைவரிடத் திலும் செல்லத்தக்க ஆவணங் கள் ஏதும் கிடையாது என்று அவர் சொன்னார். கைதான வர் கள் மீதும் 1959/1963 குடிநு ழைவுச் சட்டம் பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவர் என்று சூப்ரிண் டெண்டன் சாரி பின் அரிப்பின் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்