img
img

நஜிப் அரசாங்கம் உடனடியாக கவிழும்!
திங்கள் 13 மார்ச் 2017 14:08:15

img

அம்னோ அல்லாத 45 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப் பினர்களும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வார்களேயானால் நஜீப் அரசாங்கம் உடனடியாகக் கவிழ்ந்து விடும் என்று கூறுகிறார் ஜ.செ.க. நாடாளு மன்றத் தலைவர் லிம் கிட் சியாங். அம்னோ ஆதரவை பெற்றிருக்கும் ஷரியா நீதிமன்ற சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதற்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அனைத்து முயற்சி களை மேற்கொண்டு வருவதால், இதற்கு தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்து அம்னோ சாராத அந்த 45 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் களும் ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய முன்னணி எதிலும் ஒருமித்த கருத்தையே இதுவரை கடைப்பிடித்து வந்துள்ளது. பாஸ் கட்சியும் இதை அறிந்துள்ளது. ஆகவே, இந்த ஒருமித்தக் கருத்துப்போக்கை கவிழ்க்கும் முயற்சியாகவே ஹாடி அவாங்கின் ஷரியா சட்டத்திருத்த மசோதாவிற்கு அம்னோ ஆதரவு வழங்குகிறது என்பதை அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாஸ் கட்சியைச் சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நஜீப்பை ஆதரிக்க முடிவு செய்வார்களேயானால், அவர்களும் 86 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்தாலும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அந்த எண்ணிக்கை போதாது. சரவா தேசிய முன்னணியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற 20 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று மொத்தம் 45 பேர் தங்கள் ஆதரவை மீட்டுக்கொண்டால், மலேசியாவில் அரசியல் நெருக்கடி வெடிக்கும் என்று கிட் சியாங் கூறினார். இதற்கு ஒரே தீர்வு, ஒன்று புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும். அம்னோவின் மேலாதிக்கத்தை ஒழித்து, ஒருமித்த கருத்துப் போக்கை மதிக்கும் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். இல்லையேல், 14-ஆவது பொதுத்தேர்தலை விரைவிலேயே நடத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img