img
img

மலிவு விலை வீடுகளுக்கு ஆசைப்பட்டு பணம் கொடுத்து ஏமாந்து போன 133 தோட்டப் பாட்டாளிகள் விவகாரம்!
திங்கள் 13 மார்ச் 2017 14:00:39

img

சிலிம் ரிவர் பண்டார் பாருவில் மலிவு விலை வீடுகள் வாங்க பணம் கொடுத்து ஏமாந்து போன 133 தோட்டப் பாட்டாளிகளுக்கு மாற்று நிலமாக பேரா முன் னாள் மந்திரி புசாரால் ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர் நிலம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ம.இ.கா தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் டத்தோ கே.ஆர்.ஏ.நாயுடு கூறியிருப்பதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இங்குள்ள பக்காத்தான் ஹராப்பான் அலுவலகத்தில் சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அ.சிவநேசனுடனான சந்திப்பு நிகழ்வின் போது, பாதிக்கப்பட்ட தோட்டப் பாட்டாளிகளின் நடவடிக்கைக் குழு தலைவர் சைமன் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். கடந்த 13.9.2001ல் செனட்டராக இருந்த தொகுதித் தலைவர் நாயுடு, ம.இ.கா தொகுதி அலுவல கத்தில் இந்த வீட்டு மனை பிரச்சினை குறித்து பாதிக்கப் பட்ட வர்களுக்கு விளக்கமளித்துள்ளார் என்பதை மறந்து விட்டாரா என சைமன் வினவினார்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராங் புரோட்டோன் சிட்டியில் கட்டப்படும் வீட்டுமனைத் திட்டத்தில் 10 விழுக்காடு கழிவு தரப்படும் அல்லது பேரா மாநில அரசு 15 ஏக்கர் நிலம் வழங்கும் என்றும் நாயுடு தெரிவித் திருந்தார். இத்தகவல் மறுநாள் தமிழ் தினசரிகளில் வெளியாகியிருந்த தாகவும் தெரிவித்தார். மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த டத்தோ இராஜுவும் இவ்விவகாரம் குறித்து சந்திப்பு நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இதன்வழி தோட்டப் பாட் டாளி களுக்காக 15 ஏக்கர் நிலம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நாயுடு கூறுவது ஏற்றுக் கொள்ளமுடியாது என குறிப்பிட்டார். அண்மையில் நடந்த சந்திப்பு நிகழ்வில் தோட்டப் பாட்டாளி களுக்காக மாநில அரசு வழங்கிய 15 ஏக்கர் நிலம் குறித்து வரும் சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக அ.சிவநேசன் தெரிவித்தார். சட்டமன்ற கூட்டத் தொடரில் பாதிக்கப்பட்டவர்கள் பிரதிநிதிகள் இருவர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். பண்டார் பாருவிலேயே வீடுகள் அல்லது நிலத்தைப் பெறுவது என்பது இயலாது என்றும் அதற்கான மாற்று நிலம் வழங்கப்பட்டது குறித்து மாநில அரசிடம் விளக்கம் பெறவிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img