img
img

40 ஆண்டுகளாக பயன்படுத்திய நிலத்தை இழந்த விவசாயிகள்!
திங்கள் 13 மார்ச் 2017 13:57:13

img

பேரா மந்திரி புசார் வாரியத்திற்கு எதிராக துரோனோ விவசாயிகள் தொடுத்த தடை உத்தரவுக்கோரும் மனு வினை கடந்த 9-3-2017இல் ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ சம்சுடின் ஹாசான் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து இன்று மேல் முறையீடு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை பிரதிநிதித்து டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசனும், திருமங்கையும் ஆஜராகினர். கடந்த 16-12-2016-ல், விவசாயிகள் அனைவரும் நிலத்தை காலி செய்ய வேண்டும் எனவும் பேரா மந்திரி புசார் வாரி யம் தான் நிலத்தின் உரிமையாளர் என்றும் ஈப்போ உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு அடுத்த மாதம் ஏப்ரல் 17-ம் தேதி செவிமடுக் கப்படவிருக்கிறது. ஆகவே, மேல் முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுவினை செவிமடுக்கும் வரையில், பேரா மந்திரி புசார் வாரி யம் நிலத்தை காலி செய்ய பெற்ற தீர்ப்பிற்கு ஒரு தற்காலிக தடை உத்தரவு வழங்கக்கோரும் மனு ஒன்று நேற்று முன்தினம் டத்தோ சம்சுடின் முன்நிலையில் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட இந்த ஏழு விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிபூத்தே துரோனோவில் பல ஆண்டு காலமாக கைவிடப்பட்ட அரசு தரிசு நிலத்தினை மேம்படுத்தி அதில் கால் நடை, மீன்கள், காய்கறிகள், பழ வகைகள் உற்பத்திசெய்து வருகின்றனர் என டத்தோ அம்பிகா வாதிட்டார். இதன் அடிப்படையில் ஒரு தற்காலிக தடை உத்தரவு அவசியம் எனவும், இல்லையேல் விவசாயப் பயிர்கள், கால் நடைகள், மீன்கள் எல்லாம் எந்த நேரத்திலும் அழிக்கப்படும் அபாய நிலையில் இருப்பதாகவும் டத்தோ அம்பிகா என்ற சிறப்பு காரணங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களை செவிமடுத்த நீதிபதி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் நிலத்தினை பயன் படுத்தி பலன் அடைந்துள்ளனர். ஆகவே, கடந்த 2012-ல் இந்த நிலத்தின் உரிமை யாளராக பதிவுபெற்றுள்ள பேரா மந்திரி புசார் வாரியம் நிலத்தை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு என தீர்ப்பினை வழங்கி, விவசாயி களின் தடையுத்தரவுக்கோரும் மனுவினை பத்தாயிரம் வெள்ளி செலவுத்தொகையுடன் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து இன்று திங்கட்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்யப்போவதாக விவசாயிகளின் வழக்கறிஞர் டத்தோ அம்பிகா தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img