செராஸ் தாமான் கியூபெக்ஸில் இயங்கி வரும் தேசியப்பள்ளி, 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதில் 89 தமிழ் மாணவர்கள் 29 சீன மாணவர்கள் கல்வி பயின்று வரு கின்றனர். இப்பள்ளிக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் அராப் மொழியை கற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் இந்திய மாணவர்கள், சீன மாணவர்கள் கண்டிப்பாக அராப் மொழியை படிக்க வேண்டுமென கட்டாயம் இல்லை என குடியிருப்போர் சங்கத்தின் துணைத்தலைவரும் மலேசிய இந்தியர் பென்சீனியர் சங்கத்தின் தலைவருமான டாக்டர் அந்தோணி தெரிவித்தார். கல்வி இலாகாவின் விதிப்படி 15 இந்திய மாணவர்கள் இருந்தால் போதும். ஒரு தமிழ் வகுப்பை ஆரம்பிக்கலாம் என தெரிய வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டத்தில் 49 இந்திய பெற்றோர்கள், 10 சீனப் பெற்றோர்கள் கல்வி இலாகாவில் இருந்து (2) இரண்டு அதிகாரிகள் (துணையமைச்சர் ப.கமலநாதன் சார்பில்) தலைமை ஆசிரியர், குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் டத்தோ ரவிசங்கருடன் பொது மக்களும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். தமிழ் வகுப்பு நடத்த வேண்டுமென்றால் பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்தில் நடத்தலாம். எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என தலைமை ஆசிரியர் கூறினார். அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலை நேர வகுப்பு ஒத்து வராது. பள்ளி நேரத்தில் வைக்க வேண்டும். அராப் மொழி போதிக்கும் சமயத்தில் தமிழ் வகுப்பையும் நடத்தலாம். சீனப் பாடத்தையும் இணைந்து நடத்த வேண்டுமென அந்தோணி தெரிவித்தார். பல தடவை துணை அமைச்சர் ப.கமலநாதனை தொடர்பு கொள்வதற்கு முயன்றும் முடியவில்லை. கல்வி இலாகாவில் இருந்து வருகை புரிந்த இரண்டு அதிகாரிகளும் வாய் திறக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. துணையமைச்சர் ஏன் மௌனம் சாதிக்கிறார். இதற்கு உடனடியாக கமலநாதன் ஆவன செய்ய வேண்டுமென அந்தோணி குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்