செம்பனைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக கொத்தடிமைகளாக சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 18 பேரை வைத்திருந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து 23 வயது மதிக்கத்தக்க இந்திய இளம் பெண் மீட்கப்பட்டுள்ளார் என்று பேரா சிஐடி தலைவர் டத்தோ கான் தியான் தீ கூறினார். இந்த இளம் பெண் செக்ஸ் அடிமையாக நடத்தப்பட்டார் என்பது புலன் விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணை மீட்டு அவருக்கு சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்காலான் உலு கம்போங் தாசேக் எனுமிடத்தில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் ஐந்து சிறார்கள் உட்பட 18 பேரை கொத்தடிமைகளாக வைத்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டு மீட்கப்பட்டதோடு இதற்கு காரணமான இரண்டு இந்திய தம்பதியர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்விருவர் மீதான புலன் விசாரணை பூர்த்தியடைந்து விசாரணை அறிக்கை அட்டர்ணி ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுக்கு போலீஸ் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டது. கொத்தடிமை விவகாரத்தில் சிக்கிய 44 வயது ஆடவர், 23 வயது இளம் பெண் ஒருவரை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தது புலன் விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்று கூறினார். செக்ஸ் அடிமையாக வைக்கப்பட்டிருந்த 23 வயது இந்திய இளம் பெண்ணை மீட்டுள்ள போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் 14 வயது சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்