img
img

என் மூச்சு தமிழ்! என் ஆரம்பம் தமிழ்ப்பள்ளி!
ஞாயிறு 12 மார்ச் 2017 13:05:59

img

ஆறாம் படிவம் என்பது மாணவர்கள் நிறைவான கல்வியறிவோடு முதிர்ச்சி பெறக்கூடிய பரந்த தளமாகும். அந்த தளத்தை சென்றடையக்கூடிய ஒரு மாணவன், சிறந்த மதிப்பெண்களை மட்டுமல்ல. உள்ளூர் பல்கலைக்கழகத் திலேயே மிக குறைந்த செலவில் தனது உயர்கல்வியை முடிப்பதற்குரிய தளத்தையும் தடத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது என்கிறார் நாட்டில் முன்னணி பல் மருத்துவரான டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு. காப்பார், ஜாலான் காப்பார், ஐந்தரை மைல் சுங்கை பூலோ தோட்டத்தில் வேங்கு - வள்ளியம்மை தம்பதியரின் ஐந்து பிள்ளைகளில், இரண்டாவது பிள்ளையான டாக்டர் நெடுஞ்செழியன் தமிழ்க்கல்வியோடு, தனது ஆறாம் படிவத்தை முடித்து, 1988 ஆம் ஆண்டு சிறந்த மதிப்பெண்களுடன் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவத்துறையில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பயின்றவர் ஆவார். ஒரு சாமானியர் என்ற நிலையில் தனது தந்தை அறிவுறுத்திய ஒரே விஷயம் என்னவென்றால் குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். இந்த ஐவரையும் கரை சேர்க்க வேண்டும்.ஐவரும் பல்கலைக்கழகம் வரையில் செல்ல வேண்டும். பட்டதாரிகளாக உருவாக வேண்டும். கடல் கடந்து உயர்க்கல்வி பயிலும் வாய்ப்பு நமக்கு இல்லை. அதற்குரிய நிலையிலும் நமது குடும்பம் இல்லை. நமக்கு இருக்கக்கூடிய ஒரே தேர்வு, இங் குள்ள பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வி பயில்வதுதான். அதற்கு ஆறாம் படிவமே சிறந்த தேர்வாக இருக்க வேண்டும் என்று தனது தந்தை வேங்கு வலியுறுத்தியது, எவ்வளவு பெரிய ஆழமான உண்மை மட்டுமல்ல. பொருள் பொதிந்தவையாகும் என்று நினைவுகூர்கிறார் மலேசிய பல்மருத்துவர் சங் கத்தின் தலைவருமான டாக்டர் நெடுஞ்செழியன். நமது மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வு முடித்தவுடன் அவர்கள் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளிலும் உயர் கல்வி பயில நிறைய தேர்வுகள் இருக்கலாம். தங்கள் பிள்ளைகள் விரும்பும் துறைகளில் அந்தத் தேர்வை உருவாக்கிக்கொடுக்கக்கூடிய வாய்ப்பையும் அந்தஸ்தையும் வசதியையும் இன்றைய பெற்றோர்கள் கொண்டு இருக்கலாம். ஆனால், எஸ்.பி.எம். கல்வியை முடித்த பின்னர் ஆறாம் படிவத்திற்கு ஒரு மாணவன் செல்லும் போதுதான் அதிகமான போதனைகளையும் வாழ்வியல் பண்புகளையும், நட்புறவான நல்ல நண்பர்களையும், மனித நேயமிக்க ஆசிரியர்களையும் நல்லதொரு கல்விச்சூழலையும் இதற்கு மேலாக முதிர்ச்சிக்குரிய பக்குவத்தையும் பரந்த அனுபவத்தையும் பெறுகிறான் என்பது கடந்த 1986 இல் நான் ஆறாம் படிவம் படித்த போது எனக்கு உணர்த்தியது. ஆறாம் படிவத்தில் சிறந்த மதிப்பெண்களை பெறக்கூடியசூழல் எனக்கு அமைந்தது. அந்த அளவிற்கு தரமான கல்வி வாய்ப்பை ஆறாம் படிவம் எனக்கு வழங்கியது. அது மட்டுமல்ல, ஆறாம் படிவ கல்வி தேர்ச்சி நிலை உலக அளவில் அங்கீகரிக்கப்படக்கூடியவையாகும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவத்துறையில் பயிலும் வாய்ப்பு ஏற்பட்ட பின்னர், 4 ஆண்டுகளில் 8 பருவகால கல்வி பயின்றேன். ஒவ் வொரு பருவகால கல்விக்கும் தலா 700 வெள்ளியைத்தான் என் குடும்பத்தினர் செலவிட்டனர். எனது மருத்துவப்படிப்பே 5,600 வெள்ளிக்குள் முடித்துக் கொண்டேன். இதே கல்வியை உள்ளுர் தனியார் மருத்துவக்கல்லுரி அல்லது வெளிநாட்டில் பயின்று இருப்பேன் என்றால் கிட்டத்தட்ட 250,000 வெள்ளி முதல் 450,000 வெள்ளி வரையில் செலவிட வேண்டியிருந்து இருக்கும். என் குடும்பத்தில் அனைவருமே ஆறாம் வகுப்பு வரையில் பயின்றதால்தான் அனை வருமே பட்டதாரிகளாக உருவாக முடிந்தது. என் தந்தையும் தனது பிள்ளைகளை பட்டதாரிகளாக உருவாக்க முடிந்தது என்கிறார் சொந்தமாக மூன்று பல் மருத்துவக் கிளினிக்குகளை நடத்தி வரும் டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு. எஸ்.பி.எம். கல்வியில் தேர்ச்சிப்பெறக்கூடிய நமது மாணவர்கள், பெரும் பொருள் செலவில் குறுகிய காலத்திலே கல்விக்குரிய பல்வகை வாய்ப்புகள் வருகின்றன என்று நினைத்து, தனியார் கல்விக்கூடங்களில் சேர்ந்து படிக்கும் நிலை இல்லாமல் தொடர் கல்வியின் மற்றொரு கரையான படிவம் ஆறு வரை தொட்டு, பொது பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியை தொடர்வதையே தங்களின் தேர்வாகவும் விருப்பமாகவும் இருக்க வேண்டும் என்பதையே நான் ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன் என்கிறார் டாக்டர் நெடுஞ்செழியன்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img