இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் 34 விமானக் குழு பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. 30 விமான பணிப்பெண்கள் உட்பட 34 குழு உறுப்பினர்களை உடல் பருமன் காரணமாக பணியிலிருந்து நீக்கியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த சின்ஹா தெரிவித்துள்ளார். தற்போது, ஏர் இந்தியாவின் தேசிய அளவிலான விமான குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,490 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஜெயந்த சின்ஹா கூறியதாவது, DGCA வழிகாட்டுதலின் படி பெண்களுக்கு அதிகப்படியான பிஎம்ஐ 22, ஆண்களுக்கு 25. எனவே அதன் படி உடல் பருமனான பணியாளர்களை நீக்கியுள்ளோம். நீக்கப்பட்ட விமான குழு பணியாளர்கள் உடல் எடையை குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் வாய்பபு வழங்கும், மூன்று மாதத்திற்குள் அவர்கள் உடல் எடையை குறைத்து மீண்டும் பணிக்கு திரும்பலாம் என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்