பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி வந்தார். அவர் தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும், அந்நாட்டின் மன்னராட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சென்ற அவர் மாயமானார்.
ரியாத் நகரில் இருந்து அனுப்பப்பட்ட 15 ஏஜெண்டுகள் கொண்ட குழு ஒன்று அவரை கொன்று தூதரகத்தில் வைத்து பல துண்டுகளாக்கியது. அவரது உடல் இதுவரை கண்டறியப்படவில்லை. கசோகிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என 4 வாரிசுகள் உள்ளனர்.
கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு சவுதி அரேபிய அரசு ஒப்பு கொண்டது.
இதைத் தொடர்ந்து சவுதி அரசு விசாரணை நடத்தியது. பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று சவுதி நீதிமன்றம் கண்டறிந்தது.
இதை தொடர்ந்து ஐந்து பேர் தூக்கிலிடப்படுவார்கள், மேலும் மூன்று பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் ரியாத்தில் உள்ள அரசு வக்கீல் அலுவலகத்தில் இன்று வாசிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்