16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை உருவாக்கி இருப்பது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதன் முதலாக விண்வெளி படை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் போர்ஸ் என்று அழைக்கப்படுகிற இந்த படைக்கு முதல் ஆண்டு செலவினத்துக்காக 40 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த புதிய படையை உருவாக்கி இருப்பது பற்றி டிரம்ப் கூறும்போது, விண்வெளி படை உலகிலேயே மிகவும் புதிய படை ஆகும். நமது தேச படைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருக்கிற நிலையில், விண்வெளியில் அமெரிக்காவின் உயர்ந்த நிலை மிகவும் முக்கியம். இந்தப் படையை நாம் தான் வழிநடத்துகிறோம். மிக விரையில் நிறையவற்றுக்கு நாம் வழிநடத்தப்போகிறோம். விண்வெளிப்படை ஆக்கிரமிப்பை தடுக்கவும், இறுதி நிலத்தை கட்டுப்படுத்தவும் எங்களுக்கு உதவும் என குறிப்பிட்டு உள்ளார்.
விண்வெளிப்படை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இந்தப் படை விண்வெளியில் வைத்திருக்கப்பட மாட்டாது.
இது அமெரிக்க சொத்துகளை பாதுகாக்கும், நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களைப் போல தகவல் தொடர்பு கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
இந்த படைக்கு விமானப்படை தளபதி ஜே ரேமண்ட் தலைமை தாங்குவார். 6 ஆயிரம் வீரர்களை கொண்டிருக்கும் என விமானப்படை அமைச்சர் பார்பரா பேரட் கூறி உள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்