உலகின் அதிக எடை கொண்ட பெண் அறுவை சிகிச்சைக்கு முன்னே 120 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரில் வசித்து வந்த இமான் என்ற பெண்மணிக்கு அவரது 11 வயதில் ஏற்பட்ட பக்கவாதத்தின் காரணமாக படுத்த படுக்கை யானார். கடந்த 25 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இவரது உடல் எடை 500 கிலோவாக அதிகரித்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்த இவருக்கு உதவி செய்ய இந்தியா முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் விமானத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு உடல் எடை குறைப்புக்கான ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பே, 120 கிலோ எடை குறைந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முப்பஷால் கூறுகையில்,'‘இமானின் உடல் எடை இங்கு வரும் போது 498 கிலோவாக இருந்தது. தற்போது 120 கிலோ குறைந்து 300 கிலோவுக்கு மேல் என்ற அளவில் உள்ளது. மரபணு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் அந்த அறிக்கை கிடைத்து விடும். அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் அவருக்கு உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்